முதல் பார்வையில் காதல்

என் மனதினில் பூத்தாய்,
பூவாய்...
அன்பு(பூ)வாய்!!!

என் விழிதனில் வழிந்தாய்,
நீராய்....
ஆனந்த கண்ணீராய்!!!!

என் செவிதனில் நுழைந்தாய்,
இசையாய்.....
தமிழ் இசையாய்!!!!

என் நாவினில் எழுந்தாய்,
மொழியாய்...
செம்மொழியாய்!!!!

என் உயிரினில் புகுந்தாய்,
காற்றாய்....
நீர் ஊற்றாய்....

என்னைத் தழுவிச்சென்றாய்,
தென்றலாய்.....

என் முதல் காதல் நீயடி...
உன்னைப் பிரிய மாட்டேன் நானடி... ,
கனவிலும் ; சாவிலும் கூட
உன்னை மறக்க மாட்டேன்..
வெறுக்க மாட்டேன்...!!!

என் தாயும் நீயடி ;
என் சேயும் நீயடி;
என் காதலியும் நீயடி;
என் முதல் காதலும் நீயடி....
உன் நினைவுகளால்
மட்டும் என் வாழ்வடி...!!!!

என் அழகியே...
தமிழ் அழகியே!!!

எழுதியவர் : பானுமதி (19-Nov-17, 10:19 pm)
சேர்த்தது : மதி
பார்வை : 262

மேலே