அழகிய பெண்

பால்கொண்ட கிண்ணங்களில் தோய்ந்து எடுத்த கன்னங்களில் பசுநெய்யும் தேம்பிவழிகின்ற ............
........உன் வாடாத மலர்இதழில் தேனூறுகின்ற போது வண்டுகள் வட்டமிடாதோ..................
தென்திசை தேடி வரும் தென்றல் காற்று உன்னழகை வருடி வர வந்தபாதை மறந்து உன்னடியில் தஞ்சமென உன்னுடலில் சுவாசமென தேங்கி வெளிவரும் போது நீ கண்ணகியின் அம்சமென கற்புற்ற பெருமையை போற்றி செல்லும்
கற்பனைகளின் உச்சத்தில் வரையப்பட்ட ஓவியத்தில் உயிர் கொண்ட சிற்பத்தின் நிழல் கூட நீயில்லை என யான் கண்ணுற்ற அழகிற்கு எல்லை இல்லவேஇல்லை.

எழுதியவர் : Krishna (14-Nov-17, 11:00 pm)
Tanglish : alakiya pen
பார்வை : 1279

மேலே