சரவணன் சா உ - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சரவணன் சா உ |
இடம் | : பட்டாக்குறிச்சி |
பிறந்த தேதி | : 02-Mar-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 443 |
புள்ளி | : 17 |
சூரியனும் உதித்தது
இலைகளும் துளிர்த்தது
தாமரையும் மலர்கிறது
மாங்கனியும் கனிந்தது
நட்சத்திரமும் மிளிர்கிறது
கதிரும் அறுவடைக்கு வந்தது
ஏனோ மக்கள் வாழ்வில்
வசந்தம் மட்டும் பிறக்கவில்லை..
- கவி குழந்தை
சதிராடும் கூந்தலும்
சண்டையிடும் கண்களும்
சத்தமிடும் காதணிகளையும்
கண்டு கனவில்
சந்திக்க செல்கிறேன்
செவ்வாயினை கண்டிருந்தால்
சந்ததிற்கே சென்றிருப்பேன்
நல்லவேளை முக கவசம்
காத்தது...
- கவி குழந்தை
மூன்றில் விலகியிருந்த அவள்
ஐந்தில் அடைந்துவிட்டால் என்னவள்
- கவி குழந்தை
நிலவென முகமிருக்கும்
அழகுடன் தானிருக்கும்
வானமாய் நாணம்
அதில் மேகமாய் நானும் - காதணி
பளிங்கென மேனிருக்கும்
பருவமுகை பூத்திருக்கும்
பல இரகசியம் பேணும்
தேகத்தை
காவலிருக்க வேணும் - தாவணி
அழகினை காட்ட காதணி இருக்க
மேனியை காக்க தாவணி இருக்க
கவரும் கள்ளனிடமிருந்து
மொத்தத்தையும் காக்க
முன்வருவேன் நான் - காலணி
- கவி குழந்தை
நிலவென முகமிருக்கும்
அழகுடன் தானிருக்கும்
வானமாய் நாணம்
அதில் மேகமாய் நானும் - காதணி
பளிங்கென மேனிருக்கும்
பருவமுகை பூத்திருக்கும்
பல இரகசியம் பேணும்
தேகத்தை
காவலிருக்க வேணும் - தாவணி
அழகினை காட்ட காதணி இருக்க
மேனியை காக்க தாவணி இருக்க
கவரும் கள்ளனிடமிருந்து
மொத்தத்தையும் காக்க
முன்வருவேன் நான் - காலணி
- கவி குழந்தை
ஓம்
நமசிவாய !!
ஐந்தெழுத்து மந்திரத்தை
ஐந்து மண்டலம் நான் கூறி
ஐம்பூதங்களை அடக்க அல்லவே
ஐயமுடன் தான் கூறி
ஐம்புலனை அடக்க வல்லவே...
-கவி குழந்தை
அல்லில் அலையும்
ஆண் அரக்கனின்
இச்சையை தீர்க்க
ஈரில்லா ஈகையோடு
உந்தன் உணர்ச்சியோடும்
ஊன் உடலை தானம் செய்வாயே..
எங்கள் பத்தினியை காக்க
ஏகாந்த நிசியில்
ஐயத்தோடும்
ஒப்பற்ற குணத்தோடும்
ஓலம் நிறைந்த மனதோடும்
ஒளடதமாய் தோன்றும்
விலை மாதிரையே......
கவி குழந்தை
சா. உ. சரவணன்
அல்லு - இரவு , இச்சை - ஆசை, ஈர் - எல்லை, ஈகை - கொடை, ஏகாந்தம் - தனிமை, நிசி - இரவு, ஐயம் - பயம், ஓலம் - அழுகை, ஒளடதம்- மருந்து
அல்லில் அலையும்
ஆண் அரக்கனின்
இச்சையை தீர்க்க
ஈரில்லா ஈகையோடு
உந்தன் உணர்ச்சியோடும்
ஊன் உடலை தானம் செய்வாயே..
எங்கள் பத்தினியை காக்க
ஏகாந்த நிசியில்
ஐயத்தோடும்
ஒப்பற்ற குணத்தோடும்
ஓலம் நிறைந்த மனதோடும்
ஒளடதமாய் தோன்றும்
விலை மாதிரையே......
கவி குழந்தை
சா. உ. சரவணன்
அல்லு - இரவு , இச்சை - ஆசை, ஈர் - எல்லை, ஈகை - கொடை, ஏகாந்தம் - தனிமை, நிசி - இரவு, ஐயம் - பயம், ஓலம் - அழுகை, ஒளடதம்- மருந்து
நண்பனாக துணையாய் இருந்தபோதும்
காதலனாக என்னை களவாடிபோதும்
கணவனாக என் வாழ்வில் வந்தபோதும்
தகப்பனாக என் குழந்தையுடன் நின்றபோதும்
ஒவ்வொரு கணமும் உன்மீதான
மதிப்பு கூடுகிறதே - என்
மரியாதைக்குரிய
மன்னவனே.......!!!🤴🤴
யார் ஒருவன் இவ்வுலகில் ....
சமத்துவம் காண விரும்புகின்றானோ
சாதிமதசமயம் அடியே துறக்கின்றானோ
சமூகத்தில் நன்மையை விதைகின்றானோ
சான்றோரின் வாக்கினை
- நியாயப்படுத்துகின்றானோ
சந்தேகமில்லா வாழ்க்கையை
- வாழ்கின்றானோ
சகலமும் அறிந்தவனாக திகழ்கின்றானோ
அவனே சமூகத்தின் சக்கரவர்த்தி..............
அதிநவீனமான இவ்வுலகில்
நீ தோன்றினாய் அபினயமாய்
என் அன்பே.........
உன் கன்னத்தை நான் வருடவே
என் இதயத்தை திருடினாயோ
என் வாழ்க்கையை நீ பகிரவே
என் வேண்டுதலுக்கு நீ பணிந்தாயோ
நம் சந்ததியை நாம் ஈன்றெடுக்கவே
என்னைத் திருமணம் செய்யத்
- துணிந்தாயோ