விலை மாதிரை

அல்லில் அலையும்
ஆண் அரக்கனின்
இச்சையை தீர்க்க
ஈரில்லா ஈகையோடு
உந்தன் உணர்ச்சியோடும்
ஊன் உடலை தானம் செய்வாயே..
எங்கள் பத்தினியை காக்க
ஏகாந்த நிசியில்
ஐயத்தோடும்
ஒப்பற்ற குணத்தோடும்
ஓலம் நிறைந்த மனதோடும்
ஒளடதமாய் தோன்றும்
விலை மாதிரையே......

கவி குழந்தை
சா. உ. சரவணன்


அல்லு - இரவு , இச்சை - ஆசை, ஈர் - எல்லை, ஈகை - கொடை, ஏகாந்தம் - தனிமை, நிசி - இரவு, ஐயம் - பயம், ஓலம் - அழுகை, ஒளடதம்- மருந்து

எழுதியவர் : சா. உ. சரவணன் (26-Sep-21, 5:47 pm)
சேர்த்தது : சரவணன் சா உ
பார்வை : 81

மேலே