ஓ மனிதா ஓ மனிதா

ஓ மனிதா! ஓ மனிதா!
மாறிவிடு மாறிவிடு;
மாற்றத்தை தேடி,
ஓடி ஓடி தடுமாறியதுபோதும்;
தடம் புரண்டதும் போதும்.
ஒதுக்கிவிடு, ஒதுக்கிவிடு,
கவலையை ஒதுக்கிவிடு
ஒதுங்கியதுபோதும்,
ஒதுக்கியவனை உதைத்து தள்ளிவிட்டு;
உடன்பட்டே வெற்றி நடை போட்டுவிடு.

ஓ மனிதா! ஓ மனிதா!
ஏற்புடைய மாற்றத்தை ஏற்றுவிடு;
ஏமாற்றத்தை தட்டிவிடு;
எட்டாத ஆசையை விட்டுவிடு;
எல்லாம் எனக்குத்தெரியும் என்ற இருமாப்பை,
விட்டு ஒழித்துவிடு;
மகத்தான காரிய்ம் செய்துவிடு;
மயங்கித்திரிந்து மதிகெட்டு போக வேண்டாம்;
மழுங்க வேண்டாம் உன் மூளை;
மனதில் வேண்டாம், ஒருபோதும் கவலை.
மழைத்து நிற்காது உழைத்துவிடு தளைத்துவிடு.
மலைபோல் வாழ்வில் உயர்ந்திடு;
மன்னிப்பு கேட்பதில் குறையும் இல்லை;
மன்னிப்பதால் நீ தேய்வதில்லை.

ஓ மனிதா! ஓ மனிதா!
மறக்காமல் இரு;
செய் நன்றியை மறவாமல் இரு;
மனதில் அழுக்கு படியாது வைத்திரு;
மக்கவேண்டாம் உன் சிந்தனைகள்;
மலைபோல் கவலை வந்தாலும்,
மனம் உடையாது இரு;
மார்க்கம் உண்டு என்றே நம்பி செயல்படு.

மகத்தான காரியம் செய்யாமல்
மகான் ஆனவர்கள் யாரும் இல்லை;
மண்ணில் பிறந்தவர்கள்
மடியாது இருப்பதில்லை.

உனக்கு எனக்கு என்று .இருக்காது
உபத்திரம் செய்யாது,
உண்மைக்காக இரு;
ஊருக்கும் நல்லது செய்துவிடு;
உற்றாரையும் உறவினரையும் நேசித்துவிடு;
நிஜத்தை நிமிர்ந்து பார்,
நிழலை குனிந்து பார்.

ஓ மனிதா! ஓ மனிதா!
துறந்துபார் கோபத்தை;
திறந்துபார் இதயத்தை;
மறந்துபார் மோகத்தை;
சுமந்துபார் மானத்தை;
சுவைத்துப்பார் அன்பை.

ஓ நெஞ்சே! ஓ நெஞ்சே! இறங்கிவிடு, உறங்கிவிடு,
அன்புக்கு அடிமையாகிவிடு;
அடிமையாக்காதே அன்பை.

ஓ மனிதா! ஓ மனிதா!
உன் நன்மைக்காக
ஒருபோதும் உண்மையை மறைக்காதே.
இறந்தபின் அழுவதைவிட,
இருக்கும்போதே இன்பமாய் ஒன்று கூடியிரு.

ஓ மனிதா! ஓ மனிதா!
சிக்கல் இல்லாத வாழ்வு இல்லை;
சிக்காத மனிதன் இல்லை;
சிக்கனத்தை கடைபிடிக்காதவன்;
சிக்கித் தவிக்காதவன் இல்லை.

ஓ மனிதா! ஓ மனிதா!
விழுந்து விட்டாலும்,
உன் தன்நம்பிக்கையை
இழந்துவிடவில்லை .

தன் நம்பிக்கையை நம்பு;
தடுக்கி விழுந்தாலும்,
துடி துடித்து விழுந்து கிடக்காதே!
நம்பியே துடிப்போடு எழு.

படைப்பில்லாமல் உயிர் ஓட்டம் இல்லை;
உடைப்பில்லாமல் நீரோட்டம் இல்லை;
முளைப்பு இல்லாமல் மரம், செடி, கொடிகள் இல்லை;
முனைப்பு இல்லாமல் சாதனை இல்லை;
பிழைப்பில்லாமல் வாழ்க்கை இல்லை;
பிடுங்கள் இல்லாமல் தவறு நடப்பதில்லை;
பிடிவாதம் உன்னை அழிக்காது விடுவதில்லை.

ஓ மனிதா! ஓ மனிதா!
எழுச்சியுடன் செயல்படு;
கைவிட்டுப்போனதும்
கதறி அழுதாலும்
கிடைக்கப்போவதில்லை;
கவலையை விடு.

தடைகளை உடை கல்லாகும்;
தடுமாற்றத்தை தட்டி விட்டுவிட்டால்;
தடைகளுக்கும் விடைகானலாம்
உடைமாற்றம் போல்
பிரித்து பார்க்கத் துவங்கிவிட்டால்

ஓ மனிதா! ஓ மனிதா!
வாழ்க்கையும் ஓலம் தான்;
வழிபாதை தெரியாத பயணம் தான்;
வந்ததற்கும் போவதற்கும், இடையில் நடக்கும் நிகழ்வுதான்;
இடைப்பட்ட பயணத்தை, இன்பமாய் கழித்துவிடு,
இரவும் பகலும், மாறிவருவது போன்று
துன்பமும், இன்பமும்,
இன்பமும், துன்பமும் துரத்தி துரத்தி தான் வரும்;
விரத்திகொள்ளாதே.

ஓ மனிதா! ஓ மனிதா!
உயர்த்திய உடைவால் உயிரை எடுக்கும்;
உயர்த்திய உன் கரங்கள் உன் உரிமையை முழக்கும்.
பிரச்சனை பிரச்சனைதான்;
புரியாதவரை பிரச்சனைதான்;
புரிந்து பிரித்து பக்குவமாய் படித்து பார்த்துவிட்டால்;
பிரச்சனையும் பிசிருதான்.
பிடிவாதமே பிரச்சனைதான்

ஓ மனிதா! ஓ மனிதா!
மனத்தை கெடுத்து விட்டு,
பணத்தை புறட்ட புறப்பட்டுவிட்டாய்.
மண் ஆசை, பெண் ஆசை பொன் ஆசை பயணம்
மரணம் வரை துரத்தும்.

ஓ மனிதா! ஓ மனிதா!
உதிரும் வேர்வையில் உண்டு வெற்றி;
உதரும் கையில் உண்டு தோல்வி;
உயரத்துடிக்கும் மனிதனுக்கு வேண்டும் உழைப்பும், பிடிப்பும்;
நடிப்பில் இல்லை வெற்றி
நடிப்பவனிடம் இல்லை புத்தி;
நமக்கென்று ஒன்று வந்துவிட்டால்
தேடும் பக்தி;
நமக்கு வேண்டும் சுயபுத்தி'

ஓ மனிதா! ஓ மனிதா!
பூஜியத்தில் இருந்து ஒன்றாகின்றாய்;
ஒன்றில் இருந்து நீ உருவாகின்றாய்;

1ஐத் தாண்டி ஒ(ஆ)டப்பாக்கின்றாய்;
10த்தில் பாலகன், படிதாண்டி ஓடி பிடிக்கத் துவங்கிய நீ
படிக்கத்துவங்கு கின்றாய்;
20தில் உருவம் மாறிடும் பருவ ஆசை எடுத்திடும்
பருவும் வந்திடும்; காளை கன்னியாகின்றாய்;
30ஐத் தாண்டினால் தேடல் துவங்கிவிடும்,
பயம் வந்தே சேரும்;
40தில் நாய் குணம் தொத்திடும்;
50தைத் தாண்டினால் ஆற்றல் குறைந்துவிடும்;
60தில் அறிவும் முழுங்கத்துவங்கிவிடும்;
ஐயம் வரத்துவங்கிவிடும்;
70தைத் தொட்டவுடன் எழுந்து நடக்க தடுமாற்றம் எடுத்துவிடும்;
80ல் கேட்கும் சக்தி இழந்துடும்; கேட்டு கேட்டு சலிப்பு தட்டிவிடும்;
90ஐத் தாண்டினால் தொல்லைகள் பல வந்திடும்;
100ஐ தாண்டினால் நோய்நொடியே உன்னை தூக்கிடும்.
இறுதிப்பயணம் இவற்றில்
எந்தவயதில் வரும் யார் அறிவார்

ஓ மனிதா! ஓ மனிதா!
பயமே வாழ்க்கை
பயனே வாழ்க்கை;
பலமே வாழ்க்கை;
பலகீனமே உன் முடிவு;
பயணமே வாழ்கை;

ஓ மனிதா! ஓ மனிதா!
உனக்குள் உனக்குள் உன்னைத்தேடு;
உனக்கு உண்டு அமைதி.
உன் முடிவில் உண்டு நிம்மதி.
உன் ஓட்டத்தில் இல்லை உறக்கம்;
உச்சரிக்காத வாழ்க்கை நச்சரிக்கும்.

ஓ மனிதா! ஓ மனிதா!
சுகத்தைத் தேடி வாழ்வை சுமையாக்கியது போதும்;
குறை குற்றம் கண்டுபிடித்தே;
குதற்கம் செய்தது போதும்.
உன் வலிமையைப் பார்;
மனிதம் மனிதநேயத்தைத்தேடு;
மனிதம் தான் புனிதம்;
மன்னியத்தில் புன்னியத்தைத்தேடு
மறைந்து மறந்து மறைத்தும் வாழ்ந்தது போதும்
மனிதனில் இறைவனைத் தேடு;
மக்களுக்கு சேவை செய்ய, மனதைநாடு.

ஓ மனிதா! ஓ மனிதா!
நமக்கெதற்கு என்று ஒதுங்குவதைவிடுத்து;
நம் மக்களுக்கு என்று புறப்படு.

ஓ மனிதா! ஓ மனிதா!
விஞ்ஞான விளையாட்டின் விபரீதம் போதும்;
விஞ்ஞானம் உன் மெய்ஞானத்தை விலைபேசவேண்டாம்;
மெய்யை மறந்து விட்டால்,
மேனிக்கு என்ன வேலை;
உண்மையும் அப்படித்தான்
உன் மெய்யும் அப்படித்தான்.
உன் மெய்யை பார்;
உனக்குள் பேசிப்பார்;
உண்மை புலப்படும்
உன் வாழ்க்கை சிறப்புரும்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (27-Sep-21, 8:42 am)
பார்வை : 47

மேலே