கோவிட்டே நகரு

கோவிட்டே நகரு.

அன்னை
எங்கிருந்தாலும்
அன்னையே,
அவள் எங்கு
தெரிந்தாலும்
அவளே.

ஆனாலும்
சண்டியூரானுக்கோ,
சண்டியூர் கண்ணகி மீது,
அளவு கடந்த காதல்.

காலம் செய்த
கோலத்தால்,
அவளை நான்
பார்க்க முடியவில்லை.

கோபிக்க
மாட்டாளோ?
கோபிட்டே சற்று
நகர்ந்து நில்,
அன்னையை நான்
பார்க்க வேண்டும்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (27-Sep-21, 10:25 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 36

மேலே