துரித உணவு

துரித உணவு
☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️
வண்ணங்களும் வாசனையும் வளைத்துன்னை நுகரவைத்து
துரிதவகைத் துவ்வல்களில்(உணவுகளில்) தொலைத்துவிட அழைக்கிறது..

சட்டியிலே தீப்பிடிக்க சமைத்துத் தந்த உணவதனை
வெட்டிப்பயல் வாங்கித்தின்று வீணாய் கோடு(கொடுமை) செய்கின்றாயே..

வாரி(வருவாய்)யாய் வாய்தனில் வாங்கிடும் உணவெல்லாம்
ஓய்வற்றுச் செரிப்பதற்கு ஆலையல்ல உன்வயிறு..

கைநிறைய அள்ளி அள்ளி கணக்கற்றுத் தின்பதனை
மொய்(போர்) செய்தே காப்பாற்ற முடியாது வயிற்றாலும்

குடிலம்(வளைவு)முழுக்க நெளிந்து கொடுத்தும்
குடலும் அழுது கண்ணீர் வடிக்கும்

ஊழைச் சதையும் கொழுப்பும் வளரும்
ஒள்(உண்மை)தனை அறிந்தும் வாழ்க்கை நகரும்..

அசும்பு(குற்றம்) என்றறியாமல் அவனொன்றும் இல்லையடா
அள்ளிக்குவிக்கனும் பணம்தான் அவனோட எல்லையடா..

நீண்மொழி(சூள் உரைத்தல்) சொல்லும் மருத்துவன் கூட -- தன்
நாவினை அடக்கலில் வல்லவன் அல்ல..

ஒருநாள்

இரத்த நாளத்தில் தூர்தல்(அடைத்தல்) நிகழும்
பணியில் ஓய்வென்று இதயம் அகலும்..

பிடுகாய்(இடி) மரணம் துரிதாய் கிடைக்கும்
உறவுகள் உன்னால் துடியாய்த் துடிக்கும்..

அத்தம்(காட்டு வழி) என்றே அறிந்தும் வாழ்வில்
அறிவிலிப் பயணம் செல்தல் முறையா ?

கூழை(கூந்தல்) போன்றது உயிரொன்றும் அல்ல
கொட்டிடின் உடம்பினில் மீளவும் மீள !
க.செல்வராசு
கபிலக்குறிச்சி..

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

எழுதியவர் : வாழ்க்கை (27-Sep-21, 2:05 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 28

மேலே