நீ ரசிகன் டா
விண்ணை ரசித்தவன் -
வானவியலின் முடி சூடுகின்றான்
மண்ணை ரசித்தவன் -
உழுது செடி கொடி வளர்கின்றான்
எண்ணை ரசித்தவன் -
ஆய்ந்து அடிப்படை விதிக்கின்றான்
பண்ணை ரசித்தவன் -
கவிகளை பாடி மகிழ்கின்றான்
தன்னையே ரசித்தவனும் -
வாழ்வில் படிப்பல உயர்கின்றான்
ஆனால்..
பெண்ணை ரசித்தவன் -
மதியிழந்து குடி மூழ்கின்றான் ..
உண்மையில் கோடி ரசிகன் உள
அதில் நீ எந்த வகை என நினை..
- கவி குழந்தை