வினை அறுப்பாய்

வினை அறுப்பாய்.
04 / 04 / 2024
ஆணென்ன? பெண்ணென்ன?
நாம் எல்லோரும் மணவாட்டிகள்தான்.
இறையென்ன? இயற்கையென்ன?
அவன் ஒருவன் மணவாளன்தான்.
அவனோடு நாமும்
நம்மோடு அவனும்
உறவாடும் விளையாட்டு அது
வாழ்வெனும் பரமபதம்தான்..
ஏணியில் ஏறுவதும்
பூநாகம் தீண்டி இறங்குவதும்
விளையாட்டின் இயல்புதான்.
ஏறும்போது மகிழ்வதும்
இறங்கும்போது துடிப்பதும்
மனிதனின் வாடிக்கைதான்..
இதில் யாரை குற்றம் சொல்வது?
இதில் யாரை குறை சொல்வது?
குறையும் இல்லை
குற்றமும் இல்லை
எல்லாம் நீ செய்யும்
செயல்களில் இருக்கிறது.
உன் எண்ணத்தில்
உருவாகிறது.
பகடைக்காய் உன் கையில்
நீ உருட்ட காய் நகர்கிறது.
எல்லாம் உன்னால்தான்.
விதை விதைத்தால்
விதை அறுப்பாய்
வினை விதைத்தால்
வினை அறுப்பாய்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (4-Apr-24, 7:46 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 26

சிறந்த கவிதைகள்

மேலே