கர்மவினை நியதியை நான் நம்புகிறேன்
கர்மவினை நியதியை நான் நம்புகிறேன்
என் முன்வினை என்ன? மனதின் ஆழத்தில் நெம்புகிறேன்!
பத்தோடு பதினொன்று என்று வளர்ந்தவன்
உயரத்தில் மட்டும் ஆறடி உயர்ந்தவன்!
இளம்பிராயத்தில் எனக்கு என்ன அனுபவம்?
ஒன்றும் இல்லை, எனவே ஞாபகமும் இல்லை!
வாலிபத்தின் வயப்பட்டு நான் என்ன செய்தேன்?
பல அழகு பூக்களை கண்டு மட்டுமே ரசித்தேன்!
காதல் கீதல் என்பதுபோன்ற அனுபவங்கள் உண்டா?
நான் ஆசைப்பட்டவர்களை மற்றவர்தான் காதலித்தனர்!
நாற்பது வருடம் பணிபுரிந்தபோது ஏதாவது தொடர்பு?
எவ்வளவோ முறை தொடுமுன்பே அறுந்தது காதல் கயிறு!
முப்பத்திஐந்து வருடங்கள் ஓடிவிட்டன திருமணமாகி
இன்ப ரசங்கள் அனைத்தும் வற்றிவிட்டன வயதாகி!
தாய்ப்பால் அருந்தி பின் பருகினேன் வாழ்க்கை ரசம்
வற்றிய வழுக்கைப் பாலையில் புரிகின்றேன் சரசம்!
இனி என்ன நடக்கும், நாளை எப்படி இருக்கும் என்று
அறியாமல், புரியாமல், பிறர் அறியாமல் அழுகிறேன்
கர்மவினையே நம்மை நடத்துகிறது, இதை நம்புகிறேன்
இது விவஸ்தை கெட்ட மாயை எனவே நிராகரிக்கிறேன்!