அணிகலன் அன்பு

நிலவென முகமிருக்கும்
அழகுடன் தானிருக்கும்
வானமாய் நாணம்
அதில் மேகமாய் நானும் -  காதணி

பளிங்கென  மேனிருக்கும்
பருவமுகை  பூத்திருக்கும்
பல இரகசியம் பேணும்
தேகத்தை
காவலிருக்க வேணும் - தாவணி


அழகினை காட்ட காதணி இருக்க
மேனியை  காக்க தாவணி இருக்க
கவரும் கள்ளனிடமிருந்து
மொத்தத்தையும் காக்க
முன்வருவேன் நான் - காலணி

                                   - கவி குழந்தை

எழுதியவர் : சரவணன் சா உ (13-Jul-23, 7:16 am)
சேர்த்தது : சரவணன் சா உ
Tanglish : aNikalan anbu
பார்வை : 64

மேலே