உன் நினைவில் என் வாழ்க்கை

உன் நினைவில் என் வாழ்க்கை

ஏன் இந்த பார்வை
எதற்கிந்த பயணம்
எதுவரை போகும் என்றுறைப்பாயோ...

உன் அன்பை தேடி
என் நிலை மாறி
உன்மடி அடைந்தேன்
அதை மறந்தாயோ...

உன் நிழலை தாங்கியே
உன்கரம் பிடித்துமே
உன் பின்னே வருகிறேன்...

எதை நோக்கி செல்கிறாய்
செல்கிறாய் நீ....

எதைக்காண அழைக்கிறாய்
நான் விரும்பும் முன்னமே
விழிமூடி கொள்கிறாய்
கொள்கிறாய் நீ....கொள்கிறாய் நீ...

உனக்காக நானும் உயிர் துறப்பேனே என்மேலொரு கனிவில்லையா ஏன் இதை செய்தாய்...

விழியீரம் துடைக்க முகபாவம் சிவக்க செந்திரலாய் உன்னருகில் நான் இருப்பேனே...

யாரும் காணாத காட்சி
பார்க்காத வாழ்க்கை
நாம் காண போவோம்...

பிழையொன்றுமில்லை என்வாழ்க்கை பயணம்
உனக்காக தானே...

நாம் வாழ போவோம்

உன் நிழலை தாங்கியே
உன்கரம் பிடித்துமே
உன் பின்னே வருகிறேன்...

எதை நோக்கி செல்கிறாய்
செல்கிறாய் நீ....

உன்மீது கொண்ட காதலினாலே
என்னுயிர் துறக்க நான் விரைந்தேனே...

உன் நிழலை தாங்கியே
உன்கரம் பிடித்துமே
உன் பின்னே வருகிறேன்...

எதை நோக்கி செல்கிறாய்
செல்கிறாய் நீ....

எதைக்காண அழைக்கிறாய்
நான் விரும்பும் முன்னமே
விழிமூடி கொள்கிறாய்
கொள்கிறாய் நீ....

எழுதியவர் : இனியன் (14-Mar-17, 7:39 pm)
பார்வை : 336

மேலே