யுவன் இருபது வருட பயணம்

யுவன் 20 வருட பயணம்

இசையின் வாரிசு
என்பதினாலோ எப்பயிற்சிமின்றி
உன் பயணத்தை தொடங்கினாய்...

ஆரம்பகாலத்தில் நீ சந்தித்த இன்னல்கள் கொஞ்சமல்ல தலைவா

"பூவெல்லாம் கேட்டுப்பாரில் "புகழ் பெற்றாலும் இத்திரையுகம்
இசைஞானியின் மகனா இவன்
என கூறிய போதும் கொஞ்சமும் அஞ்சாது துள்ளலோடு "துள்ளுவதோ இளமையில் "முதல் முத்திரை பதித்தாய் நீ...

அன்று உன்னை கண்டு வியந்தது இவ்வுலகம் "காதல் கொண்டேன்" பார்த்த பிறகு உன்மீது காதல் கொண்டவர்களில் நானும் ஒருவனே...

பாடல் உணர்த்தும் படமென்பதற்கு உன் "7g "யின் மெட்டுக்கள் சிறந்த உதாரணம் அது காலம் கடந்தும் உன் புகழை பேசும்....

படத்திற்கு பாடல் எந்த அளவு முக்கியமோ அதனை விட பின்னணி இசை முக்கியமென்பதற்கு புதுப்பேட்டை கற்றது தமிழ் பில்லா ஆரண்ய காண்டம் என பல படங்கள் உண்டு உன் படைப்பில் ....

இசைஞானியின் வசீகரம் உன்னிடம் கண்டோம் உன் குரலில்
ஆம் உன்குரலில் மயங்கிய ரசிகர்கள் பல...

காதலாயினும் காதல் தோல்வியாயினும் உன்னிசையின்றி கடந்ததில்லை நாங்கள்...

"மலர்களே பாடலில் பெண்மையை எடுத்துறைத்தாய் "பேசுகிறேனில்" தாயின் ஏக்கத்தை உறைத்தாய்

துவண்டு போன இதயத்தை மீட்டெடுத்தது உன் "ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடி போகாது"...

"ஆராரிராரோ நானிங்கு பாட "என்று தாய்மையையும் "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் "என்று தந்தையின் அன்பையும் தெளிவாய் உறைத்தாய் நீ...

தவறான காதலால் ஏற்பட்ட விளைவினை "ஆராரிராரோ நானிங்கு பாட தாயுமில்லை "என்று உன்குரலில் கேட்டபோது கண்கலங்காத மனிதம் இல்லையிங்கு....

"ஆனந்த யாழை மீட்டெடுத்த" உன்னிசை பயணம் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம் தலைவா....

சே.இனியன்

எழுதியவர் : சே.இனியன் (17-Mar-17, 1:03 pm)
சேர்த்தது : இனியன்
பார்வை : 224

மேலே