கலாமிற்கு காணிக்கை

மறைந்த பிதாமகர் கலாமிற்கு எனது காணிக்கை
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கலைந்து போனது, கலாமின் கனவுலக பயணம்
உறைந்து போனது, உழைப்பாளிகளின் உதிரம்
செயலிழந்து போனது, செயற்கைக்கோள்களின் சேவை
அரித்து போனது, அணு உலையினுள் அமிலம்
மரித்து போனது, மாணவர்களின் மகிழ்ச்சி
இறந்து போனது, இந்தியாவின் எதிர்காலம்
இந்தியாவின் இரவு, இனிமேல் விடியாது
ஏனென்றால்,
புதைந்து போனது, உன் பூவுடல்..
சத்தியத்தின் சோதனை உன் மரணம்
சத்தியமாக நீ பிறந்து வரணும் ...
--அருணன் கண்ணன்