Sangai Muthu - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sangai Muthu |
இடம் | : Sankarankovil |
பிறந்த தேதி | : 02-May-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 397 |
புள்ளி | : 42 |
நான் ஒரு பொறியியல் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். எனக்கு நேரம் கிடைக்கும் போது கவிதையும் பாட்டும் எழுதும் பழக்கம் உண்டு. அது மற்றவர்க்கு போய் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வலையில் சேர்ந்துள்ளேன்.
மற்றவர்க்கு நீ அழகில்லையெங்கிலும்
ஒரு சில குறை உன்னில் உண்டெங்கிலும்
நீயெனக்கு இன்றும் என்றும்
அழகு தான்..
காரணம்....
மற்றவர்கள் உன்னைக் காண்பது
கண்ணின் வழி
நானுன்னைக் காண்பது
என் மனசின் வழி..
அம்மா! அம்மா!!
நான் அலறுவது கேட்கிறதா?
நான் புலம்புவது புரிகிறதா?
நான் தானம்மா
உன் ஐந்து மாதக் கரு
உன்னோடு பேசுகிறேன்...
அம்மா..
நான் பெண் சிசுவென்று
உன் கருவறையிலே
எனக்கு கல்லறை கட்டிவிடாதே...
நான் மண்ணுலகம் காண வேண்டும்
உன் மடி மீது தவழ வேண்டும்
தந்தை மார் மீது துயில வேண்டும்
அம்மா... ஸ்கேன் செய்ய வேண்டாமம்மா...
நான் பெண்ணாய் பிறந்து
பெரும்புகழ் சேர்ப்பேன்...
அரசியலில் இந்திராவோ?
அன்பு செலுத்த அன்னை தெரசாவோ?
அறிவியலில் கல்பனா சாவ்லாவோ?
ஆன்மீகத்தில் அமிர்தானந்த மாயியோ?
எத்துறையில சிறப்பேனோ?
எனக்காக சரித்திரம்
காத்து கடக்கிறது...
சிசுவான என்னை
சிதைத்து விடாதே
அன்னையே... நீ
தெய்வமென்ற
மற்றவர்க்கு நீ அழகில்லையெங்கிலும்
ஒரு சில குறை உன்னில் உண்டெங்கிலும்
நீயெனக்கு இன்றும் என்றும்
அழகு தான்..
காரணம்....
மற்றவர்கள் உன்னைக் காண்பது
கண்ணின் வழி
நானுன்னைக் காண்பது
என் மனசின் வழி..