ஒரு கருவின் கதறல்

அம்மா! அம்மா!!
நான் அலறுவது கேட்கிறதா?
நான் புலம்புவது புரிகிறதா?
நான் தானம்மா
உன் ஐந்து மாதக் கரு
உன்னோடு பேசுகிறேன்...
அம்மா..
நான் பெண் சிசுவென்று
உன் கருவறையிலே
எனக்கு கல்லறை கட்டிவிடாதே...
நான் மண்ணுலகம் காண வேண்டும்
உன் மடி மீது தவழ வேண்டும்
தந்தை மார் மீது துயில வேண்டும்
அம்மா... ஸ்கேன் செய்ய வேண்டாமம்மா...
நான் பெண்ணாய் பிறந்து
பெரும்புகழ் சேர்ப்பேன்...
அரசியலில் இந்திராவோ?
அன்பு செலுத்த அன்னை தெரசாவோ?
அறிவியலில் கல்பனா சாவ்லாவோ?
ஆன்மீகத்தில் அமிர்தானந்த மாயியோ?
எத்துறையில சிறப்பேனோ?
எனக்காக சரித்திரம்
காத்து கடக்கிறது...
சிசுவான என்னை
சிதைத்து விடாதே
அன்னையே... நீ
தெய்வமென்றால்
அழித்து விடாதே என்னை...


அம்மாவின் கதறல்:
அடி வாங்கி
உடல் வீங்கி
அல்லல் படும்
ஆத்தா நான்...
மாமியார் சொல் மீற
சுதந்திரம் தான்
எனக்கு இல்ல...
முறுக்கி திறுக்கி
வெளியேற போக்கிடம் தான்
எனக்கும் இல்ல...
பாவிகள் வாழும் இந்த
பரந்த உலகம்
உனக்கு வேண்டாமடி... கண்ணே
ஆவிகள் வாழும்
பரலோகம் சென்றுவிடு
அதிர்ஷ்டம் உனக்கிருந்தால்
அடுத்த ஜென்மத்தில்
எனக்கே வந்து
ஆண் மகனாய் பிறந்து விடு...!

எழுதியவர் : சித்ரா ராஜ் (31-Jan-14, 9:47 pm)
பார்வை : 94

மேலே