அழவைத்தாய் அந்தமானே

வரைபடத்தில் பார்த்த தீவு
வங்கத்தில் மிதக்கும் தீவு
வண்ணக்கடல் எழில் கொஞ்சும்
வனப்பான அந்தமான் தீவு ....!!

விழி யிரண்டு போதலையே
வியப்பில் இமை மூடலையே
விடை கொடுக்க மனமிலையே
விமானம் தரை இறங்கும்வரை ....!!

அந்தமானின் கவின் கடலில்
அலைகள் கூட கொஞ்சியதே
அடுக்கடுக்காய் பல நிறத்தில்
அழகாய் துள்ளி ஆடியதே ....!!

படகுப் பயணம் மகிழ்ச்சியே
பயம் கொஞ்சம் கலந்ததே
பல தீவுச் சுற்றுலாவும்
பசுமையாய் நெஞ்சில் நிறைந்ததே ..!!

என்மனம் ரசித்த அலைகடலோ
எம்தமிழர் உயிர் பலிகொண்டது ?
எழுத வார்த்தை வரவில்லை
எழுவது விம்மல் மட்டுமே .....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (31-Jan-14, 10:03 pm)
பார்வை : 100

மேலே