சித்ராதேவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சித்ராதேவி
இடம்:  விருத்தாச்சலம்
பிறந்த தேதி :  14-Apr-1982
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Jan-2014
பார்த்தவர்கள்:  2293
புள்ளி:  894

என்னைப் பற்றி...

சொல்லிக்கொள்ளபெரிதாய் ஒன்றும் இல்லை. அரசுப் பள்ளி ஆசிரியை நான்.
வாழ் நாளில் ஒரு கவிதையேனும் எழுதிவிட வேண்டும் என்பது என் அவா.

என் படைப்புகள்
சித்ராதேவி செய்திகள்
சித்ராதேவி - சித்ராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-May-2017 3:12 pm

ஆன்டிராய்டும் ஐஃபோனும் தின்று தீர்த்த என் பொழுதுகளின் எச்சங்களையே மற்ற யாவைக்குமாய் செலவிடுகிறேன்
சிக்கனமாக..

மேலும்

நீண்ட நெடுங்காலம் ஆகிறது எழுத்து தளத்தில் எழுதி 07-Apr-2020 8:48 pm
அசால்ட்டா அடிக்கிறீங்க கவிஞரே .. அருமை.. வாழ்த்துகள் .. 21-May-2017 5:23 pm
சித்ராதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2017 3:12 pm

ஆன்டிராய்டும் ஐஃபோனும் தின்று தீர்த்த என் பொழுதுகளின் எச்சங்களையே மற்ற யாவைக்குமாய் செலவிடுகிறேன்
சிக்கனமாக..

மேலும்

நீண்ட நெடுங்காலம் ஆகிறது எழுத்து தளத்தில் எழுதி 07-Apr-2020 8:48 pm
அசால்ட்டா அடிக்கிறீங்க கவிஞரே .. அருமை.. வாழ்த்துகள் .. 21-May-2017 5:23 pm
சித்ராதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2016 9:40 pm

பிள்ளை வரம்
******************

மண்சோறு திண்று
மடி பிச்சை கேட்டு
அரசமரம் சுற்றி
கோயில் குளம் அலைந்து
ஆயிரமாயிரம் மருந்து
மாத்திரைகள் விழுங்கி
லட்சங்களில் செலவு செய்து
லட்சியமாய் பெற்றப் பிள்ளை
அலட்சியமாய்பார்க்கிறது.... இன்முகமாய் வளர்த்த பிள்ளை
ஏளனமாய் பார்க்கிறது....
காசை கொட்டி வளர்த்த பிள்ளை
கணக்கு பார்த்து முறைக்கிறது....!
கருவில் உதைத்ததும்
வலிக்கவில்லை....
நெஞ்சில் மிதித்ததும்
வலிக்கவில்லை....
காரணமின்றி
ஒதுக்குவதே வலிக்கிறது
முதுமை என் முக'வரி'க்கு
வந்தது பிடிக்கலையோ?
சுற்றி சுற்றி வந்து
முந்தானை பிடித்தப் பிள்ளை
மனையாளின் முந்தானை
பற்றி எனை மறந்த மாயமென்ன?

மேலும்

மனப்பாடக் கல்வியால் சிந்திக்கும் திறன் இழந்த பிள்ளைகள் சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் போது பெற்பாறர்மீது வைத்திருந்த அனபை புதைத்து மனைவிதாசர் ஆகிறார்கள். 19-Jun-2016 11:56 pm
fasrina அளித்த படைப்பில் (public) தஞ்சை சதீஷ் குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Dec-2015 9:51 am

எதிர்பாரா தருணத்தில்
தொலை தூரம் நீயிருக்க
பார்வை பரிமாற்றம்
முதல் சந்திப்பில்
மொழியாய் ....

எதிர்பாரா தருணத்தில்
என் முன் நீயிருக்க
புன்னகை பரிமாற்றம்
இரண்டாம் சந்திப்பில்
மொழியாய் ....

எதிர்பாரா தருணத்தில்
என் அருகில் நீயிருக்க
வார்த்தை பரிமாற்றம்
மூன்றாம் சந்திப்பில்
மொழியாய் ....

எதிர்பாரா தருணத்தில்
என் தோழியுடன் நீயிருக்க
கண்ணீர் பரிமாற்றம்
நான்காம் சந்திப்பில்
மொழியாய் ...

மேலும்

அருமை! 05-Jan-2016 8:14 am
சந்திப்புக்கள் எதிர்பாராதவை ஆனால் இந்த அளவு பாரமாய் அமைந்தால் நிச்சயம் வாழ்க்கை சலித்து விடும் நல்ல படைப்பு கற்பனை என்றால் பாராட்டலாம் அனுபவம் என்றால் சோகம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2015 1:17 pm
சேரனின் ஆட்டோ கிராஃப் போல.... 14-Dec-2015 11:29 am
ம்ம்ம்ம்ம்ம்....சாத்தியமா????.....சிந்தனை வித்தியாசமாய்...... 14-Dec-2015 10:15 am
சித்ராதேவி - bharathkannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2015 9:02 pm

குடியிருப்புகளின் மடியறுத்ததால்,
பரிதவிக்கிறான் மனிதன்.............
ஆம்,
நீர்நிலைகளின் நிரந்தர இடத்தை,
நீள அகலங்கள் அளந்து காசாக்கினான்,
வானகம் சென்று ஊர்திரும்பிய மழை,
நிறைந்துகொண்டது தத்தமது இடத்தில்....
இங்கே,
வெளியேற்றப்படுகிறான்,
கூட்டம்கூட்டமாய் கூடாரமிழந்து,
சிலர் செய்த தீவிணைக்கு,
பலம்கொண்டு தாக்குகிறது இயற்கை......
அவலங்களினூடே அலறுகிறது மனிதம்..........
கூடி குமைந்தவர்கள் நாடி தளர்ந்தனர்............
லட்சங்களுக்கு உதவ கோடிகளில் தகிக்கிறது இதயங்கள்.........
செய்தது தவறுதான்,
அன்னையே தண்டிக்கலாமா அதற்கு?
ஊசலாட்டங்கள்,
உயிர் நோகும் அவலங்கள் !
மோசம் போனவர்க்கு பாசம் மட

மேலும்

நன்றி நட்பே.......... 01-Jan-2016 9:04 pm
ஆயிரம்பேர் செய்த அநியாயம்.............. லட்சங்களை வாங்குகிறது காவு............ உண்மை.....மறுப்பதற்கில்லை 07-Dec-2015 8:29 am
சித்ராதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2015 9:47 pm

மூட மறந்த சன்னல் வழியே
தேடி வந்த குளிர் காற்று
தேகம் வருடி
சொல்லாமல் சொல்லியது
மாரியாய் வந்ததை...!
அதிகாலை துயில் எழுந்து
திரைச்சீலை விலக்கி
வெளி உலகை பார்க்கையில்
பூப்படைந்த புதுப்பெண்ணாய்
பூமாரிபொழிந்திருக்கு
அதுவாசல் வரை வழிந்திருக்கு
தோட்டத்து செடிகளெல்லாம்
ஆசைதீர குளித்திருக்கு
அங்கம் மகிழ்ந்து
அது தலையாட்டி சிலிர்த்திருக்கு....
கரைபடிந்த சுவரையெல்லாம்
மழை கழுவி துடைச்சிருக்கு
அதை காசில்லாம செய்திருக்கு...
மலிந்தசாக்கடையும்
தெளிந்து ஓடிருக்கு
அதையும் மழை தான் செய்திருக்கு
வெல்லமாய் நானினைத்து
ரசித்துப் பார்க்கையிலே
வெள்ளம்...வெள்ளம் என
கூப்பாடு கேட்கிறதே.....!

மேலும்

ஆம்..... மாற்றம் ஒன்றே மாறாததாய் இருக்க இப்போது மனிதனும் அதனோடு பங்கு போட்டான்..... 27-Dec-2015 3:39 pm
அளவை மீறும் பொது வெல்லமான மழையும் வெள்ளமாக மாறி மக்களை கொல்கிறதே சகோதரி... 18-Dec-2015 11:02 am
அருமை வரிகள் வாழ்த்துக்கள் அக்கா 07-Dec-2015 11:08 am
மழை அழகுதான் தோழமையே.. அது இந்த கவிதையை போல... ஆனால் சில நேரங்களில் அது மரணத்தையே தரும்போதுதான் மனம் கனக்கிறது.. அது அந்த மக்களை போல... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Dec-2015 6:41 pm
நிலாசூரியன் அளித்த படைப்பை (public) tmohan மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Nov-2015 11:24 am

சிறுவயதில்
நான் எறிந்து மகிழ்ந்த கற்கள்
இன்னும் அடியாழத்தில்
அப்படியே கிடக்கிறது

ஆண்டுகள் பல
கடந்துகொண்டே இருந்தாலும்;
இன்றும்கூட சிறுவர்கள்
ஓயாமல்
எறிந்துகொண்டேதான் இருக்கிறார்கள்

இது
இதோடு
முடிந்துவிடுவதில்லை

நாளையும் வருவார்கள்
நிச்சயம் எறிவார்கள்

ஆனால்!
தூர்ந்துபோன குளத்தை
தூர்வாரத்தான் யார் வருவார்களோ...?


------------------நிலாசூரியன்.

மேலும்

இப்ப இருக்கின்ற அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோகிணறு வெட்டறது ஆறு வெட்டுறது பற்றியெல்லாம் கவலைப்படுறத்யா தெரியல. தூர்ந்து போன கேணிய தூர் வார்றதுல தான் குறியா இருக்காங்க .. 28-Mar-2016 3:10 pm
சும்மா நச் வரிகள்... 28-Mar-2016 3:04 pm
சபாஷ்...இதை அரசியல் நையாண்டியாகவும் பார்க்கலாம். 30-Nov-2015 8:55 pm
சூப்பர் ... 26-Nov-2015 9:21 am
சித்ராதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2015 12:38 pm

வஞ்சிக்கும் உங்களுக்கு
வாஞ்சையுடன் பரிசளித்தேன்.....
காய்கிறது பயிரென்று
கர்நாடகத்தில் கையேந்தி
குடிநீர் இல்லையென்று கிருஷ்ணாவில் கூக்குரலிட்டு
முல்லைப் பெரியாறு பற்றி
மூச்சு முட்ட கத்துகின்றீர்....!
ஆளுங்கட்சி எதிர் கட்சியாகவும்
எதிர்கட்சி ஆளுங்கட்சியாகவும்
மாறும் போது மட்டுமே
பேசி கொள்(ல்)கின்றீர்
முறையீடு செய்கின்றீர்
மன்றாடி பார்க்கின்றீர்.....!
குமுறும் விவயாசியிகளின் உள்ளம்
குளிரவே கொட்டி தீர்க்கின்றேன்....
நான் கொட்டியதை
கெட்டியாய் சேமிக்க
கொள்ளளவு கொண்டதெல்லம்
கொள்ளை போனதெடா....
ஏரி குளமெல்லாம்
பட்டாவாகி , எவனுக்கோ சொத்தாகி ..... .
மீதமெல்லாம் மண்மூடி
மலையாய் ம

மேலும்

மிக நல்ல படைப்பு.... உண்மையான கேள்வி... 30-Nov-2015 7:10 am
மிக்க நன்றி..... 16-Nov-2015 5:34 am
நல்ல சமூக சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 2:51 am
நீண்ட நாட்களுக்குப் பிறகு சகோதர் சந்தோஷ் அவர்களின் கருத்திற்கு நன்றி கூறும் வாய்ப்பிற்கு மகிழ்ச்சி 15-Nov-2015 6:20 pm
சித்ராதேவி - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2015 9:41 pm

மழையை நம்பி
மாங்கல்யம் தவிர
மற்றதை அடகு வைத்து
புழுதிக் காட்டில்
வரகு விதைத்த
வரதப்பன் ஏங்கி தவிக்கிறான்
கண்கள் வீங்கி நிற்கிறான்
வருண பகவான் வரவை நோக்கி....
மூலைத்தெரு பிள்ளையாரிடம்
முறையிடுகிறான்....
தன் நிலை உணர்ந்து
கண்ணீர் விடுகிறான்....
அம்மனுக்கு கூழை ஊற்றி
கழுதைக்கு கல்யாணம் செய்து
மழையை அழைக்கிறான்.....
பாவி மழைக்கும்
பாமரனை பிடிக்கலையே....
நகர வீதியில்
நர்த்தனம் ஆடி
கோடிகள் புழங்கும்
அண்ணாச்சி கடைக்குள்
நுரைபுரண்டு நுழைகிறது
சேட்டுகள் கடைக்கும்
சேட்டன் கடைக்கும்
குசலம் விசாரிக்க
குதூகலமாய் குழைகிறது
புழுதிக் காட்டில்
பூமாரி பொழியாமல்
சேற்றை விரும்ப

மேலும்

அடடா ! நல்ல சிந்தனை ! வாழ்த்துக்கள் ! 16-Jul-2015 3:43 am
மக்கா பண்ண்றத எல்லாம் பண்ணிபுட்டி மலை மேல குத்தம் போடுற தாயே. நீர் வாழ்க. 13-Jun-2015 10:19 am
ஒருவேளை மழையும் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்ட்டதோ என்னவோ என்றே ஐயம் எழுகிறது சித்ரா 13-Jun-2015 6:51 am
இயற்கை என்றால் அப்படிதானே... நாம் நினைப்பது ஒன்று கடவுள் நினைப்பது ஒன்று இப்போது இயற்கை நினைப்பதும் ஒன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 10-Jun-2015 12:17 am
சித்ராதேவி அளித்த படைப்பை (public) கிருஷ் குருச்சந்திரன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Jun-2015 6:53 pm

இரு நிமிட சமையல் என்று
இன்றைய அம்மாக்கள்
ஓடி ஓடி செய்து தரும்
மெழுகு பூசிய
மென்புழு நூடுல்ஸ்
எமனாகும் என்றறியாமலா
சதிகார அதிகாரிகள்
சந்தையில் விட்டார்கள்...?
வண்ண வண்ணப் பாக்கெட்டில்
வளைய வந்து
சின்ன சின்னக் குழந்தைகளின்
விருப்பம் தூண்டி
நடிகர்களின் கவர்ச்சிக் காட்டி
நாவின் சுவை தூண்டி
விளம்பரத்தில் விற்பனை பெருக்கி
ஆண்டு பல உருண்டோடி
உண்டு பலர் உடல் பெருத்து
உபத்திரம் அடைந்த பின்னா
விழித்தது அரசு....?
உணவு தரக்கட்டுப்பாட்டுத் துறைக்கு
உயரிய விருதை வழங்க வேண்டும்
உயிர் காக்கும் பொறுப்பிற்கு....

மேலும்

ஆரோக்கியமான படைப்பு தொடரட்டும் உன் விழிப்பு உணர்வு படைப்புகள் நன்றி 26-Oct-2015 3:30 pm
ஏற்புடைய கருத்திற்கு நன்றி. 06-Jun-2015 10:14 am
மிக்க நன்றி சகோ. கட்டுரை எழுத அதைப் பற்றிய,முழு தகவல்களும் சேகரிக்க வேண்டுமே.... எழுத முயற்சிப்போம்... 06-Jun-2015 10:12 am
நேரிய பார்வை வெளிப்படும் நல்லக் கருத்திற்கு நன்றி. 06-Jun-2015 10:10 am
சித்ராதேவி அளித்த படைப்பை (public) tmohan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
26-May-2015 6:18 am

பொன்னுக்கும் பொருளுக்கும்
கவி புனைய
நான் சங்கப் புலவனும் அல்ல
பணத்திற்கும், புகழுக்கும்
கவிதை புனைய
நான் சினிமா கவிஞனும் அல்ல
கட்டாயத்தில் கவி புனைய நான் காதல் கிறுக்கனும் அல்ல
கவிதை என்பது
கருவாய் உருவாகி
தருவாய் செழித்து
உருவாய் வர வேண்டும்...
சுகத்தை சோகத்தை
சுவாசித்து வரவேண்டும்
நான் வலிகளுக்காய
எழுதும் வைத்திய கவிஞன்
ஆகா... ஓகோ என்று
உவமை ஒய்யாரம் இருக்காது
அலங்கார ஒப்பனை இருக்காது
அடி மனதின் ஆற்றாமை
ஊற்றாய் எடுக்கும்போது
உளறுவதே என் கவிதை.....!

மேலும்

நற்சிந்தனை.... நல்ல படைப்பு.... 30-Nov-2015 7:15 am
இல்லை இல்லை .... 27-May-2015 5:56 pm
நன்றி சகோ 26-May-2015 11:09 pm
நன்றி கீர்த்தனா... 26-May-2015 11:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (481)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா

இவர் பின்தொடர்பவர்கள் (482)

சிவா

சிவா

Malaysia
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி

இவரை பின்தொடர்பவர்கள் (481)

வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்
user photo

Bullet Pandi

Thiruvanna Malai
மேலே