எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நெடு நாளாக நான் பதிய நினைத்தக் கருத்து இது. இத்தளம் எத்தனையோ படைப்பாளிகளை கண்டிருக்கிறது. எழுத்து தளமான இதில் சில நடிகர்களும் உண்டு. சில அரசியல் வியாதிகளும் உண்டு. என் பார்வை அவர்கள் மீது அல்ல. ஒரு தனிப்பட்ட மனிதனை நான் ஓராண்டாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிறேன். அவரை இத்தளம் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை என்பதை விட அவர் யாரையும் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை என்பதே உண்மை, கோஷ்டி வளர்த்து,ஜால்ரா போட்டு , நன்று,அருமை என்று மொக்கை படைப்புகளுக்கெல்லாம் பொய்யாய் கருத்திடும் போலி புலவராய் இல்லாமல் தன் சுயம் பாதிக்காமல் பீடு நடைப் போட்டு 5800 க்கும் அதிகமான படைப்புகளை பதிந்து
பரிசை எதிர்ப (...)

மேலும்

தாங்கள் கூறுவது உண்மை தான் .ஆயினும் அவர் இத்தளத்தால் கெளரவிக்கப் படவில்லை. அவர் இத்தளத்தில் நட்பாடிய அளவிற்கு உறவாடவில்லை. ஒருவேலை உறவாடியிருந்தால் பிள்ளையார் சுழிக்கும் கூடா இங்குள்ள சிலர் மதிப்பெண் வழங்கிடுவர். சுய நலத்திற்கு தமிழ் விற்கக் கூடாது என்பதை சகோதரர் இனியவனிடம் கற்றேன். வாக்கு கேட்டு அரசியல் பண்ணக் கூடாது என்பதையும் அவரிடமே கற்றேன். 13-May-2015 7:14 am
மன்னிக்கவும் தோழரே இது தோழர் கிரிஷ்ணடேவுக்கு .. 12-May-2015 3:16 pm
களவாடப் பட்ட உங்கள் கவிதை இங்கே .. 12-May-2015 3:15 pm
களவாடப் பட்ட உங்கள் கவிதை இங்கே .. 12-May-2015 3:14 pm

படைப்புகள் ஆதரிக்கப் பட வேண்டுமே அன்றி படைப்பாளி அல்ல. படைப்புகள் விமர்சிக்கப் பட வேண்டுமே அன்றி படைப்பாளி அல்ல. சில நேரங்களில் நாம் சொல்ல வரும் கருத்தை சரியான கோணத்தில் சொல்ல முடியாமல் போனால் அதற்கு கடும் கண்டனம் எழும். அதானாலே பல நேரங்களில் நம் எண்ணத்தை பகிர முடியாமல் போவது திண்ணம். எழுத்து தளம் அனைவரது திறமையை வெளிச்சமிட்டு காட்டும் ஓர் அரங்கம்.
இதில் தேர்ந்தெடுக்கப் படும் கவிதைகள் பல நேரங்களில் ஆச்சர்யப்பட வைக்கிறது. எதனடிப்படையில் இதெல்லாம் தேர்வு செய்யப்பட்டது. சில கவிதைகள் நல்ல கருத்துகளை கொண்டிருந்தாலும் அது கவிதை நடையில் இருப்பதில்லை. அவை கட்டுரையாக வர தகுந்தவை. நட்பு வளர்ப் (...)

மேலும்

புரிதல் போதும் சகோ. நன்றி 13-Apr-2015 2:47 pm
அந்தத் தவறை நான் உணர்ந்து விட்டேன் தோழமையே ...தவறை உணர்ந்ததாக ஓர் எண்ணமும் பதிவிட்டுவிட்டேன் .....! மன்னிக்கவும் தாங்கள் என்னை 09-Apr-2015 9:13 pm
மன்னிக்கவும் தோழா , நான் என் கருத்தை பதியும் போது பரிசுக்குரிய படைப்பு அறிவிக்கப்படவில்லை. நான் மார்ச் 29 ல் என் எண்ணத்தை பதிவு செய்தேன். 08-Apr-2015 6:25 pm
ஹி ஹி 06-Apr-2015 12:02 pm

எந்த பகுதியில் கவிதை எழுத வேண்டும்? நல்வரவு என்னும் பகுதியில் எண்ணம் சமர்பிக்க என்ற பகுதி வருகிறதே அதில் பதிவு செய்ய இயல வில்லையே....

மேலும்

எழுத்து என்று குறித்துள்ள இடத்தில் tap செய்தால் வரும் கவிதை என்கிற தலைப்பைத் தேர்ந்தெடுங்கள் . சரியாக வரும் . 23-Jun-2014 9:21 pm

எழுது என்னும் பகுதி வேலை செய்யவில்லை. அதற்கு மாற்றாக எண்ணம் என்ற பகுதியில் எழுதினால் படம் சேர்க்க முடியவில்லை. எப்படி கவிதைக்கு படம் சேர்ப்பது? கவிதை
, நகைச்சுவை என்னும் பகுதியும் வேலை செய்யவில்லையே? எழுது என்ற பகுதி முன்பிருந்ததே தெளிவாக சிறப்பாக இருந்தது என்பது என் எண்ணம்.

மேலும்

படைப்பு எழுதும் பகுதி நன்றாகவே வேலை செய்கிறது தோழி. மீண்டும் முயற்சித்து பார்க்கவும். எதாவது தொழில்நுட்ப கோளறு இருப்பின் தெரிவு படுத்தவும். 23-Jun-2014 9:52 am

மேலே