படைப்புகள் ஆதரிக்கப் பட வேண்டுமே அன்றி படைப்பாளி அல்ல....
படைப்புகள் ஆதரிக்கப் பட வேண்டுமே அன்றி படைப்பாளி அல்ல. படைப்புகள் விமர்சிக்கப் பட வேண்டுமே அன்றி படைப்பாளி அல்ல. சில நேரங்களில் நாம் சொல்ல வரும் கருத்தை சரியான கோணத்தில் சொல்ல முடியாமல் போனால் அதற்கு கடும் கண்டனம் எழும். அதானாலே பல நேரங்களில் நம் எண்ணத்தை பகிர முடியாமல் போவது திண்ணம். எழுத்து தளம் அனைவரது திறமையை வெளிச்சமிட்டு காட்டும் ஓர் அரங்கம்.
இதில் தேர்ந்தெடுக்கப் படும் கவிதைகள் பல நேரங்களில் ஆச்சர்யப்பட வைக்கிறது. எதனடிப்படையில் இதெல்லாம் தேர்வு செய்யப்பட்டது. சில கவிதைகள் நல்ல கருத்துகளை கொண்டிருந்தாலும் அது கவிதை நடையில் இருப்பதில்லை. அவை கட்டுரையாக வர தகுந்தவை. நட்பு வளர்ப்பதாக எண்ணி அக்கவிதைக்கும் இறுதி தேர்வில் வாக்களிப்பது வேதனைக்குரியதாக இருக்கிறது. கோஷ்டி வளர்ப்பது அரசியலில் மட்டுமே இருந்து விட்டு போகட்டும்
தரமான படைப்பு யாருடையாதாக இருந்தால் என்ன? நல்ல படைப்பு பரிசை வெல்வதோடு ஒரு திறமையுடைய கவிஞன் அடையாளம் காணப்படுகிறான். நாம் நக்கீரர் பரம்பரையாக இருந்து தமிழ் வளர்க்க வேண்டாம். நம்மால் இயன்ற அளவிற்கு கவிதை வளர்க்கலாமே
...? இதில் ஏதேனும் தவறு உளதோ? பாடு பொருள். வார்த்தை பிரயோகம், மொழிஆளுமை, கவிதை நடை, சமூக அக்கறை....இதையெல்லாம் கருத்தில் கொள்ளலாமே... ? என் எண்ணத்தில் தவறில்லையே?