விஜயா 19042024

பாம்பன் ரயில்வே பாலம்
முப்பரிமாணங்களில் தான்
எத்தனை எத்தனை விசைகள்
அத்தனையும் அடக்கி ஆண்ட

ஆன்டனி விஜயாவிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

கடல் உன்னை கொண்டாடுகிறது
பாம்பன் பாலம் திறன் கண்டு
ரயில் உன்னை கொண்டாடுகிறது
டிஸைனில் உன் நேர்த்தி கண்டு..

புத்தகங்களின் பக்கங்களில்
துள்ளித்திரிந்த மான் ஒன்று
ரயில்வே பொறியியலின்
வேங்கை ஆனது...

கள்ளமில்லா வெள்ளைச்
சிரிப்பு.. அது
இறைவன் கொடுத்தது...
அனைவரிடமும் மனித நேயம்
காட்டுவது.. அது அவரே
வளர்த்துக் கொண்டது...

இவருக்கு சொல்லிக்
கொடுத்த பேராசிரியர்கள்
கற்ற பொறியியல்
காலத்தால் அழியாது
ஆன்டனி விஜயா போன்றோர்
ஞானத்தால் வாழ்கிறது..

இன்று தேர்தல் நாள்..
கல்லூரிக் கல்வியில் யாரைப்
போன்று படிக்க வேண்டும்
என்று தேர்தல் வைத்தால்
எனது பொன்னான வாக்கு
அந்தோணி விஜயாவிற்குத்தான்..

அன்புடன் தோழன்
ஆர் சுந்தரராஜன்

😀🌷🪷👍🌺👏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (1-May-24, 10:22 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 75

மேலே