சுரேஷ் 30042024

பயணத்தின் முடிவில்
மட்டுமல்ல வெற்றி...
பயணிப்பதே வெற்றி என்பது
சுரேஷின் வழி.. இன்று
அவருக்கு ஒரு பணியின் முடிவு
பல பணிகளின் துவக்கம்..

சுரேஷ்...
தன்னைச் செதுக்கிக் கொள்ள
எடுத்துக் கொண்டது
வருடங்கள் இருபத்திரண்டு..
சமூகம் மகிழ பணிகள் செய்தது
வருடங்கள் முப்பத்தெட்டு..

பெற்ற அறிவைப் பயன்படுத்தி
வருடங்கள் பல பணியாற்றி
மன நிறைவு கொள்ளும்
சுரேஷ் ஒரு மனித மாடல்...

கிடைத்த சந்தர்ப்பங்களை
எல்லாம் தன் அறிவைக்
கூர்மையாக்கிக் கொள்வதில்
பயன்படுத்திக் கொள்ளும்
வித்தை தெரிந்தவர் அதில்
விந்தை பல செய்பவர்..

தன் பணிக் காலத்தில்
இவர் போட்டது நெடுஞ்சாலைகள்
எப்படி பணியாற்ற வேண்டும்
என்று இவர் காட்டியது
நெடுஞ்சாலைத் துறைக்கு
ஒரு புதிய மைல் கல்..

நெடுஞ் சாலைகளில்
எத்தனை எத்தனையோ
இவர் போட்ட பாலங்கள்..
அத்தனையும் நேர்த்தியான
பணிக்கு அடையாளங்கள்..

தெய்வத்தான் ஆகா
தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்..
நிகரில்லா குறளுக்கு
உரை எழுதும் சுரேஷின்
உழைப்பும் விடாமுயற்சியும்..

கண்காணிப்பு பொறியாளர்
சுரேஷ் அவர்களின்
கண்காணிப்பில் அவர்
விட்டுச் செல்லும் தொழில்
மரபும் புதுமையும் இவர்
வீட்டுக்குச் சென்ற பின்பும்
துறையில் தொடரும்...

சுரேஷ் காலத்தினால் செய்த
உதவிகளில் எழுப்பப்பட்ட
சாம்ராஜ்யங்கள்.. காலங்கள்
தாண்டியும் அவர் பேர் சொல்லும்..

பொழுதுகளை வீணாக்கத்
தெரியாத சுரேஷிற்கு
வரும் பொழுதுகள் யாவும்
இனிமை வீணை வாசிக்கும்..

என்றும் நல்வாழ்த்துகளுடன்
அன்பன்.. நண்பன்..
ஆர். சுந்தரராஜன்..
🌹🪷🌺🌷👏😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (1-May-24, 11:10 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 64

மேலே