எல் சி 22052024

22.05.2024

ஜிஸிஇ எண்பத்தாறின்
அடையாளம்... இந்திய
டிஆர்டிஓவின் பெருமிதம்...
எப்போதும் இன்முகம்... அது
டாக்டர் லதாகிறிஸ்டி.. அவர்..
இறைவனின் அற்புத சிருஷ்டி...

லதா கிறிஸ்டி.. இவர்
ஏதோ வாழ்ந்து விட்டு செல்ல
வாழ்பவர் அல்ல... தன்
ஆராய்ச்சியால்.. இனிய
எழுத்துகளால் எப்போதும்
வாழ்ந்து காட்ட வாழ்பவர்..

கல்வெட்டுகள் கூட தாம்
இருக்கும் இடத்தில்தான் பேசும்...
விஞ்ஞானி லதா கிறிஸ்டி
பேசும் உரைகள் எழுதும் எழுத்துகள்..
உலகம் முழுமையும் பேசும்..

இவர் ஜிஸிஇ படித்து
டிஆர்டிஓ நோக்கிய பயணம்
அற்புதம்.. ஆர்ப்பரிக்கும்
நட்பு நந்தவன பூந்தோட்டம்..

இவர்.. ஞாலம் மகிழ
பொதுத்துவம் காண்பது
இவரது தனித்துவம்...

சமூக நலன் விசாரிக்கும்
இவரது புத்தகங்களில்
சிலுவைகள் சுமக்கும்
வார்த்தைகள் சிறகுகள் தரும்..

இவரது எழுத்துக்களில்...
ஆக்ரோஷ தருணங்களிலும்
அன்பின் ஆளுமை தெரியும்..
அக்னி சுவாலையிலும்
தென்றல் ஒன்று குளிர்
தந்துவிட்டுப் போகும்...

டாக்டர் லதா கிறிஸ்டி...
இவர் இந்திய தேசத்தின்
டாப் டென் ரக விஞ்ஞானி..
அக அமைதி சொல்லும்
மிக அழகிய மெய்ஞானி..

டாக்டர் லதா கிறிஸ்டி.. இவர்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே
பெண் இளைப்பில்லை காண்
பாரதி வரிகளின் முகவரி..

தொட்டனைத் தூறும்
மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
திருக்குறளின் விலாசம்..

டாக்டர் லதா கிறிஸ்டிக்கு..
வசந்த வாழ்த்துகள் இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்..
👏💐🌷👍

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (28-May-24, 8:40 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 45

மேலே