சிறந்த நண்பர்கள் தின கவிதை

#சிறந்த நண்பர்கள் தின கவிதை* (பெஸ்ட் பிரண்ட் டே) *முழுவதும் படித்து பரவசம் அடையுங்கள் முடிந்த வரை பகிருங்கள்.....*

_சிறந்த நண்பர்கள் தின கவிதை_

தொண்ணூற்று ஒன்பது
பூக்கள் இருந்தாலும்
'மல்லிகைக்கு' ஈடாகுமா?

எட்டு திசைகள் இருந்தாலும்
'கிழக்கு திசைக்கு' ஈடாகுமா?

ஆறு சுவைகள் இருந்தாலும்
'இனிப்பு சுவைக்கு' ஈடாகுமா?

ஏழு அதிசயங்கள் இருந்தாலும்
'தஞ்சை பெரியகோவிலுக்கு'
ஈடாகுமா?

ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும்
'ஒரு சிறந்த நண்பனுக்கு '
ஈடாகுமா?

நண்பர்களிடம்
'வாய் விட்டுப் 'பேசலாம்
ஆனால்
சிறந்த நண்பர்களிடம்
மட்டும் தான்
'மனம் விட்டு ' அழுவ முடியும்...

அம்மா அப்பாவிடம்
சொல்ல முடியாது
விவாதிக்க முடியாத
விஷயங்களைக் கூட
சிறந்த நண்பர்களிடம்
சொல்லவும்
விவாதிக்கவும்
முடியும் என்பதால்
அம்மா அப்பாவை விட
ஆறுதல் சொல்வதில்
சிறந்த நண்பனே மேல்!

துன்பம்
வேதனை
கஷ்டம்
கவலை வரும்போது ....
சில சமயங்களில்
பணம் கூட
பக்கத்திலிருந்து
வேடிக்கை தான் பார்க்கும்
சிறந்த நண்பன் தான்
அன்போடு பார்ப்பான்..

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சியால்
முடியும் என்பார்கள்....
முயற்சியால் முடியாத
அந்த ஒன்று கூட
'சிறந்த நண்பனால்' முடியும்...!

ராமாயணத்தில் வரும்
குகன் போல்...
மகாபாரதத்தில் வரும்
கர்ணன் போல்....
ஒருவனுக்கு
சிறந்த நண்பன்
கிடைத்திருந்தால்....
அவன் தான்
இந்த உலகில்
'முதல் கோடீஸ்வரன்....!'

"எல்லா இடத்திலும்
தெய்வம்
இருக்க முடியாது
என்றுதான்
தாயைப் படைத்ததான்" என்று
சொல்வார்கள் ....
அந்தத் தாயும்
எல்லா நேரத்திலும்
இருக்க முடியாது என்று தான்
தெய்வம்
'சிறந்த நண்பர்களை'
படைத்திருக்கிறான்....!

அழுகையின் போது
கைக்குட்டையாக...
ஆனந்தத்தின் போது
அணைப்பாக...
கவலையின் போது
ஆறுதலாக ....
கஷ்டத்தின் போது
பணமாக .....
பிரச்சினையின் போது
உதவியாக.....
வெற்றியின் போது
விருந்தாக....
தோல்வியின் போது தன்னம்பிக்கையாக....
விழாவின் போது
துணையாக
உடல்நலக்குறைவின் போது
செவிலியாக....
சிறந்த நண்பன் தான்
எத்தனை
அவதாரம் எடுக்கிறான்?
அந்த ஆண்டவனும்
அவதாரம் எடுப்பதில்
இவனிடம்
தோற்றுத்தான் போவான்...!

சொர்க்கத்தை
பார்க்கவேண்டுமா ?
சிறந்த நண்பனை
தேடிப் போங்கள்....
சொர்க்கம்
உங்களைத் தேடி வரும்....

அடித்தாலும்
அடுத்த நொடியே!
கண்ணீரைத்
துடைத்து விடுபவன் தான்
சிறந்த நண்பன்....

கோபித்துக் கொண்டாலும்
கொஞ்சநேரத்தில்
தானாகவே வந்து
பேசுபவன் தான்
சிறந்த நண்பன்....

பகை ஏற்பட்டபோதும்
பரிமாறிய ரகசியங்களை
பாதுகாப்பவன் தான்
சிறந்த நண்பன்....

யாருக்காகவும் விட்டுக்
கொடுக்காதவன் தான்
சிறந்த நண்பன் ....
எதற்காகவும்
விட்டு போகாதவன் தான்
சிறந்த நண்பன்.....

நான்கு பேர்
உனக்கு
சிறந்த நண்பனாக
இருப்பது பெரிதல்ல....!
நீ நான்கு பேருக்கு
சிறந்த நண்பனாக
இருப்பதே பெரிது....!



♥அனைவருக்கும்
சிறந்த நண்பர்கள் தின
நல்வாழ்த்துக்கள் ...♥

இவண்
கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (8-Jun-24, 2:31 pm)
பார்வை : 66

மேலே