மழை வெல்லம்
மூட மறந்த சன்னல் வழியே
தேடி வந்த குளிர் காற்று
தேகம் வருடி
சொல்லாமல் சொல்லியது
மாரியாய் வந்ததை...!
அதிகாலை துயில் எழுந்து
திரைச்சீலை விலக்கி
வெளி உலகை பார்க்கையில்
பூப்படைந்த புதுப்பெண்ணாய்
பூமாரிபொழிந்திருக்கு
அதுவாசல் வரை வழிந்திருக்கு
தோட்டத்து செடிகளெல்லாம்
ஆசைதீர குளித்திருக்கு
அங்கம் மகிழ்ந்து
அது தலையாட்டி சிலிர்த்திருக்கு....
கரைபடிந்த சுவரையெல்லாம்
மழை கழுவி துடைச்சிருக்கு
அதை காசில்லாம செய்திருக்கு...
மலிந்தசாக்கடையும்
தெளிந்து ஓடிருக்கு
அதையும் மழை தான் செய்திருக்கு
வெல்லமாய் நானினைத்து
ரசித்துப் பார்க்கையிலே
வெள்ளம்...வெள்ளம் என
கூப்பாடு கேட்கிறதே.....!
திருந்தாதா மக்கள் கூட்டம்? ?