அப்பா வேணும்

இன்று அவன் ....!!!
நாளை நீ.....!!!
ஏன் ? நானாய் கூட இருக்கலாம் ..!!!
இப்படியான முற்போக்கு வரிகள்
இறப்பின் ஆறுதல் தான் .....
ஆறுதலின் அர்த்தம் விளக்கும் நானே ....
ஆதரவற்று ஆதாரமற்று ,,,,,,,
வலிநீக்க வழியின்றி ......
இதயம் துடிக்கும் சவமானேன் ....
ஆத்மாத்தமான உறவுகள் பிரிகையில் ...
இருபத்திஐந்து வயதாகினும் ..
நொடிப்பொழுதில் மனம்
இரண்டரை வயது குழந்தை போல் ...
அடமாகிறது அவரை எழும்ப சொல்லி ......
பின்பு அவரின் ஆறுதல் அசரிரிகளாலே
சமாதானமாகி போனேன் .......
பாசத்தில் திளைத்த உணர்வுகள் ...
உறவுகள் ........
இறக்கபடுவதில்லை ....
நம் உயிரில் இறுக்கபடுகின்றன என ......
வலையில் வீழ்ந்தாலும்
எமனருகில் அல்ல ...
என்னருகில் தான் அவர் ....

அப்பா .....

எழுதியவர் : நிவிசரண் (30-Nov-15, 4:06 pm)
Tanglish : appa venum
பார்வை : 70

மேலே