எதிர்பாரா தருணத்தில்

எதிர்பாரா தருணத்தில்
தொலை தூரம் நீயிருக்க
பார்வை பரிமாற்றம்
முதல் சந்திப்பில்
மொழியாய் ....

எதிர்பாரா தருணத்தில்
என் முன் நீயிருக்க
புன்னகை பரிமாற்றம்
இரண்டாம் சந்திப்பில்
மொழியாய் ....

எதிர்பாரா தருணத்தில்
என் அருகில் நீயிருக்க
வார்த்தை பரிமாற்றம்
மூன்றாம் சந்திப்பில்
மொழியாய் ....

எதிர்பாரா தருணத்தில்
என் தோழியுடன் நீயிருக்க
கண்ணீர் பரிமாற்றம்
நான்காம் சந்திப்பில்
மொழியாய் ...

எழுதியவர் : fasrina (14-Dec-15, 9:51 am)
பார்வை : 110

மேலே