வசைப்பாடும் மாக்கள்
வஞ்சிக்கும் உங்களுக்கு
வாஞ்சையுடன் பரிசளித்தேன்.....
காய்கிறது பயிரென்று
கர்நாடகத்தில் கையேந்தி
குடிநீர் இல்லையென்று கிருஷ்ணாவில் கூக்குரலிட்டு
முல்லைப் பெரியாறு பற்றி
மூச்சு முட்ட கத்துகின்றீர்....!
ஆளுங்கட்சி எதிர் கட்சியாகவும்
எதிர்கட்சி ஆளுங்கட்சியாகவும்
மாறும் போது மட்டுமே
பேசி கொள்(ல்)கின்றீர்
முறையீடு செய்கின்றீர்
மன்றாடி பார்க்கின்றீர்.....!
குமுறும் விவயாசியிகளின் உள்ளம்
குளிரவே கொட்டி தீர்க்கின்றேன்....
நான் கொட்டியதை
கெட்டியாய் சேமிக்க
கொள்ளளவு கொண்டதெல்லம்
கொள்ளை போனதெடா....
ஏரி குளமெல்லாம்
பட்டாவாகி , எவனுக்கோ சொத்தாகி ..... .
மீதமெல்லாம் மண்மூடி
மலையாய் மேடேற....
எப்படி தேங்குவேன் . ....?
எங்குநான் தங்குவேன்....?
சாகும் பயிருக்கன்றி
சாக்கடையில் கலக்கின்றேன்....
வாழும் மனிதர்கின்றி
பாழாய் கடலில் கலக்கின்றேன்...
என்வழியைமறி(றை)த்துவிட்டு
என் மீது பழிபோடும் மனிதா
மனதை தொட்டுச் சொல்
வெள்ளத்தால் சேதமா?