அரும்புகள்

சின்னச்சின்ன அரும்புகள்
சிங்காரமாய் சிரிக்குது
சீருடைகள் அணிந்துபையை
சுமந்துபள்ளி செல்லுது

நல்லநல்ல அரும்புகள்
நாளைமலரும் அரும்புகள்
மலர்ந்துஇந்த நாட்டையே
மாற்றப்போகும் அரும்புகள்

கன்னல்மொழிப் பேச்சிலே
கவிதைபல தந்திடும்
கனிஇதழின் சிரிப்பிலே
காவியங்கள் தோன்றிடும்

அரும்புகளின் கூட்டம்காண
அன்புமனதில் பொங்கிடும்
குறும்புசெயலைப் பார்க்கையில்
கொள்ளையின்பம் கூடிடும்

குலுங்கிகுலுங்கிச் சிரிக்கையில்
குவலயமே மயங்கிடும்
குரலினிமை கேட்கையில்
குழலும்யாழும் தோற்றிடும்

பூக்களாக மலர்ந்தபின்
புதுமைபல படைத்திடும்
பொன்பொருளை சேர்த்துதந்து
பெற்றோர்மகிழ உதவிடும்.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (15-Nov-15, 1:45 pm)
பார்வை : 55

மேலே