அன்றைய மகிழ்ச்சி இன்றைய கவலை

சிறுவயதில்
நான் எறிந்து மகிழ்ந்த கற்கள்
இன்னும் அடியாழத்தில்
அப்படியே கிடக்கிறது

ஆண்டுகள் பல
கடந்துகொண்டே இருந்தாலும்;
இன்றும்கூட சிறுவர்கள்
ஓயாமல்
எறிந்துகொண்டேதான் இருக்கிறார்கள்

இது
இதோடு
முடிந்துவிடுவதில்லை

நாளையும் வருவார்கள்
நிச்சயம் எறிவார்கள்

ஆனால்!
தூர்ந்துபோன குளத்தை
தூர்வாரத்தான் யார் வருவார்களோ...?


------------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (25-Nov-15, 11:24 am)
பார்வை : 116

மேலே