நான் கவிஞன்

பொன்னுக்கும் பொருளுக்கும்
கவி புனைய
நான் சங்கப் புலவனும் அல்ல
பணத்திற்கும், புகழுக்கும்
கவிதை புனைய
நான் சினிமா கவிஞனும் அல்ல
கட்டாயத்தில் கவி புனைய நான் காதல் கிறுக்கனும் அல்ல
கவிதை என்பது
கருவாய் உருவாகி
தருவாய் செழித்து
உருவாய் வர வேண்டும்...
சுகத்தை சோகத்தை
சுவாசித்து வரவேண்டும்
நான் வலிகளுக்காய
எழுதும் வைத்திய கவிஞன்
ஆகா... ஓகோ என்று
உவமை ஒய்யாரம் இருக்காது
அலங்கார ஒப்பனை இருக்காது
அடி மனதின் ஆற்றாமை
ஊற்றாய் எடுக்கும்போது
உளறுவதே என் கவிதை.....!

எழுதியவர் : சித்ரா ராஜ் (26-May-15, 6:18 am)
பார்வை : 232

மேலே