மனிதனாக மாறவேண்டும்

புத்தரும், காந்தியும்
என்ன சொன்னார்கள்,
ஆசையை வெல்ல
போதித்தான் புத்தன்....
அகிம்சையை மனதினில்
பதிய பாடுபட்டார் காந்தி....
வெள்ளையன் ஆசையால்
நம்மை ஆண்டான்,
வெள்ளை ஆடை
அகிம்சையால் அவனை விரட்டியது......
நம்மவர் போதித்த கருத்துகள்
இன்று
மேலை நாடுகள் பின்பற்றுகின்றன,
நாம் என்ன செய்கின்றோம்?
ஆசை வெறி கொண்டு
அகிம்சை மறந்து
ஆணவத்தால் ஆடிகொண்டிருகிறோம்......
புத்தனும்,காந்தியும்
புகை படமாக போனார்கள்,
அவர்களின் சிந்தனைகள்
பாடபுத்தகங்களாக மாறிவிட்டன,
வெறும்
மதிப்பெண்நிற்காக அவற்றை படிக்கின்றோம் ......
இனியாவது 'மனிதனாக' மாற படிப்போமாக..............
என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்