இயற்கை உரைக்கும் வாழ்கை - உதயா

காலடி வைத்தவுடனே
கண்களை மயங்கி
மனதினை போட்டிப் போட்டு
களவாடி செல்கிறது ....

விருட்சங்களின் விசித்திர
கூட்டத்தின் நடுவே
தென்றலுக்கு ஜனனம்
அளித்துக்கொண்டிருந்தது
சிறு சிறு பூவனங்கள்.....

பல வினாக்களுக்கு
விடை தெரியாமல்
பித்த நிலையை அடையசென்ற
என் மதியிலும்
ஞான தீபம் ஏற்றிவைத்தது
அந்த சலனமற்ற அருவிகள் ....

கார்முகில்
கண்களில் பொத்தியே
வளர்த்தெடுத்த பேரழிகள்
சாரலாய் உருவம் தரித்து
முத்தமிட்டு உணர்வெனும்
விதைக்கு உரமிட்டு செல்கிறது ...

ஓடும் நீரின் பாதையில்
புது நீர் வந்து சேர
சேறு ககதிகளும்
மீன் குஞ்சுகளை
ஈன்றெடுத்து
தாய்மையடைகிறது .....

எத்துனை வியத்தகு
எழில்மிகு காட்சிகள்
இருப்பினும் அனைத்துமே
ஏதோ ஒரு செய்தியினை
உரைத்தும் உணர்த்தியும் தான்
கடக்கிறது.....

எழுதியவர் : udayakumar (25-May-15, 9:40 pm)
பார்வை : 66

மேலே