வெள்ளக்காடு
குடியிருப்புகளின் மடியறுத்ததால்,
பரிதவிக்கிறான் மனிதன்.............
ஆம்,
நீர்நிலைகளின் நிரந்தர இடத்தை,
நீள அகலங்கள் அளந்து காசாக்கினான்,
வானகம் சென்று ஊர்திரும்பிய மழை,
நிறைந்துகொண்டது தத்தமது இடத்தில்....
இங்கே,
வெளியேற்றப்படுகிறான்,
கூட்டம்கூட்டமாய் கூடாரமிழந்து,
சிலர் செய்த தீவிணைக்கு,
பலம்கொண்டு தாக்குகிறது இயற்கை......
அவலங்களினூடே அலறுகிறது மனிதம்..........
கூடி குமைந்தவர்கள் நாடி தளர்ந்தனர்............
லட்சங்களுக்கு உதவ கோடிகளில் தகிக்கிறது இதயங்கள்.........
செய்தது தவறுதான்,
அன்னையே தண்டிக்கலாமா அதற்கு?
ஊசலாட்டங்கள்,
உயிர் நோகும் அவலங்கள் !
மோசம் போனவர்க்கு பாசம் மட்டிலும் பிரதானமாய்............
உதவ ஓடிவரும் துடிதுடித்த உள்ளங்கள்,
உவகை மறந்து போகிறது ஊர்வலம்..............
ஆயிரம்பேர் செய்த அநியாயம்..............
லட்சங்களை வாங்குகிறது காவு............
கண்டுவிட்ட பேரழிவு நின்று நிலைக்கும் ஆண்டுகளுக்கு.........
கூடவே தலைமுறை கடந்து நாம் செய்த பெரும்பாவம்............
தாண்டிவர ஊசலாடுகிறோம்,
வேண்டாம் அன்னையே உன் கோரத்தாண்டவம்...........
மண்ணின் மைந்தர்கள் என எப்படி சொல்லுவோம் இனி.......
அதையே அடிவரை தோண்டி நாசமாக்கி?
கொப்புரத்தேங்காய் குப்புறவிழுந்து உடைந்ததாய்,
சுற்றிலும் அவலங்கள்..........
தண்டனைகள் முடியட்டும்..........
தாளவில்லை எங்களால்........
தன்மையாய் உனை மதிப்போம் உண்மையாய் அன்னையே.........
சாகவைத்தது போதும் வாழவைத்து வழிவிடு............
வெள்ளக்காடாய் திரிபவளே,
உன் உள்ளக்காட்டில் வாழ்பவர் நாங்கள்..........................