நூடுல்ஸ் என்னும் அரக்கன்

இரு நிமிட சமையல் என்று
இன்றைய அம்மாக்கள்
ஓடி ஓடி செய்து தரும்
மெழுகு பூசிய
மென்புழு நூடுல்ஸ்
எமனாகும் என்றறியாமலா
சதிகார அதிகாரிகள்
சந்தையில் விட்டார்கள்...?
வண்ண வண்ணப் பாக்கெட்டில்
வளைய வந்து
சின்ன சின்னக் குழந்தைகளின்
விருப்பம் தூண்டி
நடிகர்களின் கவர்ச்சிக் காட்டி
நாவின் சுவை தூண்டி
விளம்பரத்தில் விற்பனை பெருக்கி
ஆண்டு பல உருண்டோடி
உண்டு பலர் உடல் பெருத்து
உபத்திரம் அடைந்த பின்னா
விழித்தது அரசு....?
உணவு தரக்கட்டுப்பாட்டுத் துறைக்கு
உயரிய விருதை வழங்க வேண்டும்
உயிர் காக்கும் பொறுப்பிற்கு....

எழுதியவர் : சித்திரா ராஜ் (3-Jun-15, 6:53 pm)
பார்வை : 106

மேலே