பொள்ளாச்சி அபி - சுயவிவரம்

(Profile)



நடுநிலையாளர்
இயற்பெயர்:  பொள்ளாச்சி அபி
இடம்:  பொள்ளாச்சி
பிறந்த தேதி :  18-Feb-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Sep-2011
பார்த்தவர்கள்:  6813
புள்ளி:  3039

என்னைப் பற்றி...

பிறையாய் தெரிவதால்
நிலவில் குறையிருக்காது.!
மனதில் மெய்யில்லாவிடில்
எழுத்தில் சத்தியம் மிளிராது..
கயமை மிக்க மனதில்
கவிதைபிறக்காது..!
காலத்தை கிரகிக்காமல்
சரித்திரம் பிறக்காது.!

நீ போகும் பாதையில்
பதிந்துகிடக்கும் முட்களை
பரிசுத்தமாக்கிவிட்டுப்போ..
பின்வருபவர்கள் உன்னைத்
தொடர்கிறார்களாவென பார்க்காதே..!

கனியை உண்பவர்கள் குறித்த
கணக்கெதெற்கு.?
உனது பணியாய்
மரத்தைநட்டுவிட்டுப்போ.

உனதுதேவை எங்கோ
ஒரு இடத்தில் இருக்கிறது.!
முடங்கிவிட நீ சாக்கடையல்ல
காட்டாற்றுவெள்ளம்.

இணைந்து வருவதை -நீ
உருட்டிக் கொண்டு போ..
எதிர்ப்பதையும்..சேர்த்து.!

-பொள்ளாச்சி அபி- B+ve
-- sunpollachi@gmail.com
9894602948

என் படைப்புகள்
பொள்ளாச்சி அபி செய்திகள்
பொள்ளாச்சி அபி அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
30-Jan-2016 12:04 am



தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.!   


கடந்த இருமாதங்களாக நம் தோழர்கள் அனைவரையும் தளத்தினுள் ஏறக்குறையக் கட்டிவைத்திருந்த ஒரு வெற்றிகரமான தொடராக “காட்சிப்பிழைகள்..” எனும் கஜல் தொடர் அமைந்திருந்தது என்பதில்,உங்களைப் போலவே நானும் மகிழ்ச்சி கொண்டிருந்தேன்.இந்த மகிழ்ச்சியை புத்துணர்வுடன் துவக்கி வைத்த தம்பி ஜின்னா,நன்றிக்குரியவர். உங்கள் அனைவரின் சார்பிலும், காட்சிப்பிழைகளின் வரிசையில் முத்தாய்ப்பாக நீங்கள்தான் எழுத வேண்டும் என்று ஜின்னாவால் எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்கும் சேர்த்து எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.!கடந்த சில நாட்களாக நம்தோழர்கள் அனைவரும் எழுதிய கஜல் கவிதைகளை நான் அவ்வப்போது வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். கருத்து எதுவும் பதிவு செய்யமுடியவில்லை. காரணம்..பிறகு சொல்கிறேன்.!

தோழர்கள் எழுதிய கவிதையில்..இன்னாரென்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.எழுதிய எல்லோரும் அவரவர் நாளில்,அபாரமாக எழுதியிருந்தனர்.வரிகளில் தெறித்த சிந்தனைகள் சிலநேரம் என்னை வாயடைக்க வைத்தது.வரிகளிலேயே என்னை சுழன்று கொண்டிருக்கப் பணித்தது.உவமைகள்,வார்த்தையில் மிளிர்ந்த ஜாலங்கள் வாண வேடிக்கையை நிகழ்த்தியிருந்தன.!.கஜல் தொடரினை பயிற்சிக்களமாக கொள்ள வந்தவர்களெல்லாம் அதில் அற்புதமான முறையில் ஜெயித்துக் கொண்டே போனார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.அனைவருக்கும் மனமுவந்த எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி..மிக்க மகிழ்ச்சி..!

கூடவே..தோழர் அகன் அவர்களும்,திரு.கவின்சாரலன் அவர்களும் தோழர்கள் எழுதப்போகும் கவிதைகளின் போக்கை செழுமைப்படுத்தும் விதத்தில் தங்கள் கருத்துக்களையும்,உதாரணங்களையும் அழகாக அடுக்கிக் கொண்டுபோனது நல்ல வழிகாட்டுதலாகவும் இருந்தது.அவர்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்..!


தோழர் டி.என்.முரளி அவர்களுக்கு பிரத்தியேகமாக எனது நன்றியையும் வாழ்த்தையும் சொல்லவேண்டும்.காரணம்..வழக்கமாக “தம்பி உடையான் படைக்கஞ்சான்..”என்பதுதான் பழமொழி.ஆனால்..அண்ணன் இருக்கிறேன் அஞ்சேல்..என்று,தம்பி ஜின்னாவின் பளுவைத் தாங்கிப் பிடித்ததில் புதுமொழியை சொல்ல அல்ல..செய்தே காட்டிவிட்டார். “முரளி சார்..மிக்க நன்றி சார்.!”
அப்புறம்..தோழர்களே..கஜல் கவிதைகளோடான உங்களது ருசிகர அனுபவத்தை எப்போதேனும் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.! எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமா..?

நானும் இத்தொடரில் எழுத வேண்டுமே..என்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது.எந்த இலக்கணத்திற்குள்ளும் சிக்காமல் வந்ததையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தவன் பேசாமல் அப்படியே இருந்திருக்கலாம்.

ஆனால்,சும்மா இருக்காமல் வலியப் போய் (ஒரு ஆர்வக் கோளாறில்தான் ) ஜின்னாவிடம் வாய்ப்பு கேட்டு மாட்டிக் கொண்டோமா..என்று கூட கேள்வி வந்தது.

சரி..கஜலுக்கான இலக்கணத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று இணையத்தில் தேடிப்பார்த்ததில் நிறைய நிறைய வரைமுறைகள், வரம்புகள்..என கண்ணைக்கட்டியது. அதுவும் கஜல்கள், அடிப்படையில் உருது மொழியிலிருந்து வந்தது என்பதால் ராபியா என்றும்,ஷேர் என்றும், மத்லா, அப்புறம் மஃதா என்றும் இருந்த வார்த்தைகளை நினைவிலிருத்தவும் சிரமமாக இருந்தது.(இலக்கணத்தில் சிக்கல் இல்லை..வரும் பிப்ரவரி.18.ஆம் தேதியில் 50 வயதை தொட இருக்கிறேன்.ஒருவேளை அதுவும ;காரணமாக இருக்கலாம்) இதனால் கூடவே கவலையும் தொற்றிக் கொண்டது.எல்லாவற்றையும் விட பெரிய கவலை..கஜல் கவிதைகள் பெரும்பாலும் காதலையும்,அதன் பின்னனியில் இயங்கும் ஒரு சொகத்தையும்.. இல்லையில்லை.. ஒரு சோகத்தையும் பாடிக் கொண்டிருப்பதாக இருக்கவேண்டும் என்பது ஒரு விதியாக வேறு மிரட்டிக் கொண்டிருந்தது. அடக்கஷ்டமே..இத்தனை வயசுக்கப்புறம்..காதல் என்ற மூடுக்குப் போய்..அதை அடிப்படையா வெச்சு கவிதை..அதுவும் கஜல் கவிதை எழுதணுமாமே..!..ஊம்..இது நடக்குமா..? என்று எனக்கு சந்தேகமும் வந்துவிட்டது.

எனக்கு இருந்த வேலைப்பளுவும், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகளுக்கான நெருக்கடியும் தொடர்ந்து சுமையாய் அழுத்த.. ஸ்..ஸ்..அப்பாடா..அப்புறமாய்ப் பார்த்துக் கொள்ளலாம்..இன்னும் நாள் இருக்கிறதே..! என்று நாட்களை ஓட்டிவிட்டேன். திடுமென்று தம்பி ஜின்னாவின் அழைப்பு..நாளை உங்கள் கவிதையைப் பதிக்க வேண்டும்.நினைவிருக்கிறதா..? என்று.ஷ்..அப்போதே காற்றுப் போய்விட்டது. 

நல்லவேளை..தோழர் அகன் அவர்கள் உடனடியாக தமிழன்பன் அவர்களின் கஜல்பிறைகள் புத்தகத்தை அனுப்பிவைத்து பெரும் உதவி செய்தார். இலக்கணத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கவிதையின் போக்குகளை மட்டும் பார்த்தேன்.லேசாகவொரு நம்பிக்கை வந்தது.மேலும் ஜின்னா ஒருமுறை பேசும்போது,கஜல் கவிதையை நூறு சதவீதம் இலக்கண வரம்புக்குட்பட்டு எழுதவேண்டும் என்ற மரபுகள் எல்லாம் எப்போதோ உடைக்கப்பட்டு விட்டது சார்..” என்று சொன்னது நினைவுக்கு வர.. அப்பாடா.. நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொண்டது போல.. ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

காரணம்..சகல அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை என்ற வாசகம் மிகவும் பிடித்தமானது.என்னைப் பொறுத்த வரை இப்போதைக்கு இலக்கணத்திலிருந்தும்தான்.!

எழுதவேண்டும் என்று துவங்கியதிலிருந்து..மூன்று கவிதைகள்(?.),எழுதி விட்டேன்.எனக்கு அளிக்கப்பட்ட காட்சிப்பிழைகள்.50 என்ற எண்ணின் தொடர்ச்சியாக 51 மற்றும் 52.என வரிசை எண்ணும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.-ஜின்னா மன்னிப்பாராக..-50,51,52-என வரிசையாக கவிதைப்பக்கத்தில் பதிவு செய்திருந்தாலும் 52 என்ற எண்ணுள்ள கவிதை மட்டும் கூடுதலாக,கஜல் பாடகர் ஃபரிகா பர்வேஷின் பாடல் பின்னனியில் ஒலிக்க,அந்த ராகத்திற்காக எனது வரிகளை எழுதி,(மொழியாக்கம் அல்ல சொந்த வரிகள்தான்..) -எண்ணம் பகுதியில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளேன்.

எனது வரிகள் பிடிக்கா விட்டாலும் அந்தப்பாடலை உங்கள் கண்களை மூடிக்கொண்டு ரசிக்கலாம்.அற்புதமான பாடல்.நேரம் இருப்பவர்கள் அதனையும் பார்க்கலாம். -என்னடா..இவ்வளவு நேரமாக எழுதிக் கொண்டிருக்கிறானே..என்று யோசிக்காதீர்கள்.இரவு 12 மணியாக வேண்டும்.இதனை மறுநாள் கணக்கில் சேர்க்கவேண்டுமே.அதுதான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.

 மேலும்..உங்கள் கவிதைகளுக்கு கருத்து பதியாதற்கு காரணம் அப்புறம் சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா..அதை இப்போது சொல்லிவிடுகிறேனே..பெரிய விஷயமெல்லாம் ஒன்றும் இல்லை..,

எனது இடது கை கடந்த சில நாட்களாக ஒழுங்காக வேலை செய்யமாட்டேன் என்கிறது.குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் தூக்கவும் முடிவதில்லை.கணிணியின் முன்பாக அமர்ந்து தட்டச்சு செய்வதற்கு குறிப்பிட்ட ஒரேமாதிரி கையை வைத்திருக்க வேண்டுமல்லவா..? அதுவும் முடிய மாட்டேங்குது. பயங்கர வலி.மூன்று மருத்துவர்களிடம் சென்று பார்த்துவந்து விட்டேன்.அறுவைக்கு நிகரான சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறிவிட்டார்கள்.அதற்காகக் காத்திருக்கிறேன். அதனால்தான், ஆதாமின் அப்துல்லா தொடரும் பாதியில் நிற்கிறது.

அப்புறம் எப்படி இவ்வளவு நேரம் எழுதினாய் என்றுதானே கேட்கிறீர்கள்..? ஒரே கை..ஒரே விரல் டொக்கு டொக்கென்று ரொம்ப நேரமாய்த் தட்டித்தான் எல்லாம் எழுத முடிந்தது.!  அப்படியேனும் எழுத முடிந்ததே.. என்று இப்போதைக்கு மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன்.மீண்டும் பேசுவோம் தோழர்களே..!

உங்களுக்காக காட்சிப் பிழைகள் .52


 e>


மேலும்

மலரும் நினைவலைகள் 18-Mar-2018 1:59 pm
விரைவில் இடது கை வலி இம்சையிலிருந்து மீள வேண்டுமென அன்போடு வாழ்த்துகிறேன் அபி சார். காணொளி இணைப்பும் மிக அருமை. எனக்கு ஒன்று தோன்றுகிறது. இந்த காணொளியும். உங்கள் கஸல் படைப்புகளும் கஸல் தொடரின் ஆரம்பித்திலிருந்திருந்தால்.. தொடரில் எழுதிய ஒரு சில கவிஞர்களின் ஆளுமையில் இன்னும் கூட வசீகரம் கூடியிருக்கலாம். வித்தியாச பாணி மெருகேறியிருக்கலாம் என நினைக்கிறேன். எவ்வாறினும்.. நீங்கள் பூரண நலம் பெற்று தொடர்கதை மீண்டும் உலா வர வேண்டும். என விரும்புகிறேன். 31-Jan-2016 5:31 pm
இசையின் மிதமான குரலில் பாடல் அருமை , உங்கள் முயற்சிக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் 30-Jan-2016 10:20 pm
ஆஹா அருமை ஐயா .இன்னும் தங்கள் பதிவுகள் படிக்கவில்லை ...நாளை தான் நிம்மதியாக படிக்க வேண்டும் . ஐயா தாங்கள் உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள். தங்கள் நலனுக்காய் இறைவனை பிராத்திக்கின்றேன் . Get we'll soon 30-Jan-2016 9:21 pm
பொள்ளாச்சி அபி - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2016 9:38 pm

வரும் ஞாயிறன்று -18 / 12 /2016 - காலை 9 .மணியளவில் -பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில், நமது தோழர்கள் மகிழினி,கட்டாரி சரவணா,கவிஜி மற்றும் பொள்ளாச்சி அபி எழுதிய நூல்கள் அறிமுகம் செய்யப் படவுள்ளன.


வாய்ப்புள்ள தோழர்கள் வரலாமே..!

மேலும்

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. நிகழ்வுக்கு வர முடிந்தால், வரவேற்கிறோம்.. வாருங்கள் நண்பரே..! -அன்புடன் பொள்ளாச்சி அபி 13-Dec-2016 9:59 pm
வணக்கம் தகவலுக்கு மனமார்ந்த நன்றி விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நாங்கள் கலந்து கொள்ள ஆவல். அனைத்து நூல்கள் வாங்கி, படிக்க & பகிர விரும்புகிறேன் 13-Dec-2016 6:10 am

வரும் ஞாயிறன்று பொள்ளாச்சியில் நமது எழுத்து நண்பர்களின் நூல்கள் அறிமுக விழா. வாய்ப்புள்ள தோழர்கள் வருக..!

மேலும்

பொள்ளாச்சி அபி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2016 9:38 pm

வரும் ஞாயிறன்று -18 / 12 /2016 - காலை 9 .மணியளவில் -பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில், நமது தோழர்கள் மகிழினி,கட்டாரி சரவணா,கவிஜி மற்றும் பொள்ளாச்சி அபி எழுதிய நூல்கள் அறிமுகம் செய்யப் படவுள்ளன.


வாய்ப்புள்ள தோழர்கள் வரலாமே..!

மேலும்

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. நிகழ்வுக்கு வர முடிந்தால், வரவேற்கிறோம்.. வாருங்கள் நண்பரே..! -அன்புடன் பொள்ளாச்சி அபி 13-Dec-2016 9:59 pm
வணக்கம் தகவலுக்கு மனமார்ந்த நன்றி விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நாங்கள் கலந்து கொள்ள ஆவல். அனைத்து நூல்கள் வாங்கி, படிக்க & பகிர விரும்புகிறேன் 13-Dec-2016 6:10 am
பொள்ளாச்சி அபி - கேள்வி (public) கேட்டுள்ளார்
06-May-2016 2:03 pm

முறையாக லாகின் செய்த பின் எண்ணம் பகுதியில் படமும், சில வரிகளும் எழுதிப் பதிவு செய்தால் இது உங்கள் எண்ணம் அல்ல என்றே தளம் காட்டுகிறது.பலமுறை முயற்சி செய்தும் பலனில்லை. காரணம் தெரிவிக்க முடியுமா.? அல்லது ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறா.?

அன்புடன்
பொள்ளாச்சி அபி.

மேலும்

தொழில் நுட்ப கோளாறு காரணமாக சமர்ப்பிக்க முடியவில்லை ... தற்போது சரிபாருங்கள்.... 07-May-2016 12:49 pm
கவிதை ,கட்டுரை ,ஓவியம் ,எண்ணம் பதிவு செய்ய விபரமான வழிகாட்டுதல் பதிவு செய்யவும் . பலமுறை முயற்சி செய்தும் பலனில்லை. காரணம் தெரிவிக்க முடியுமா.? அல்லது ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறா.? 06-May-2016 2:53 pm
பொள்ளாச்சி அபி - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-May-2016 1:50 pm

இந்த தளத்தில் எழுதிக் கொண்டிருந்த,தற்போது பல்வேறு முன்னணி இலக்கிய இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய கவிஞர் தோழர்.அகர முதல்வன் அவர்களின் கவிதை தொகுப்பு அறம் வெல்லும் அஞ்சற்க "-நூல் அறிமுகம் பொள்ளாச்சியில் நடை பெறுகிறது.
வாய்ப்புள்ள தோழர்கள் வருக..!
அன்புடன்
பொள்ளாச்சி அபி

மேலும்

ரொம்ம சந்தோசம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 07-May-2016 6:05 am
தங்கள் அழைப்பு கண்டு ஆனந்தம் கொண்டேன் கவிஞர் தோழர்.அகர முதல்வன் அவர்களின் கவிதை தொகுப்பு அறம் வெல்லும் அஞ்சற்க "-நூல் அறிமுகம் பொள்ளாச்சியில் நடைபெறும் விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் நன்றி . 06-May-2016 3:07 pm
பொள்ளாச்சி அபி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2016 1:50 pm

இந்த தளத்தில் எழுதிக் கொண்டிருந்த,தற்போது பல்வேறு முன்னணி இலக்கிய இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய கவிஞர் தோழர்.அகர முதல்வன் அவர்களின் கவிதை தொகுப்பு அறம் வெல்லும் அஞ்சற்க "-நூல் அறிமுகம் பொள்ளாச்சியில் நடை பெறுகிறது.
வாய்ப்புள்ள தோழர்கள் வருக..!
அன்புடன்
பொள்ளாச்சி அபி

மேலும்

ரொம்ம சந்தோசம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 07-May-2016 6:05 am
தங்கள் அழைப்பு கண்டு ஆனந்தம் கொண்டேன் கவிஞர் தோழர்.அகர முதல்வன் அவர்களின் கவிதை தொகுப்பு அறம் வெல்லும் அஞ்சற்க "-நூல் அறிமுகம் பொள்ளாச்சியில் நடைபெறும் விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் நன்றி . 06-May-2016 3:07 pm
பொள்ளாச்சி அபி - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2011 5:40 pm

“நிறுத்துங்கள்..!” அவரின் கம்பீரக்குரலுக்கு கட்டுப்பட்ட கூட்டம்,அப்படியே உறைந்து நின்றது.கைகளில் இருந்த கற்களும்,குப்பைகளும்,சிறு தடிகளும் அப்படியே உறைந்து நின்றன.

அவர் குரல் கொடுத்த இடத்திலிருந்து.மெதுவாக நடந்து மக்கள் கூட்டத்தை நோக்கி வந்தார்.மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்களைப் போல கூட்டம் இரண்டாகப் பிளந்து அவருக்கு வழிவிட்டது. விலகிய கூட்டத்தின் வழியே நடந்து மையத்திற்கு வந்தவர்,அப்போதுதான் பார்த்தார் அவளை..,கண்ணீர் வழியும் கண்களில் மிரட்சியுடன்,கன்னத்தில் அறைபட்ட சிவப்புடன்,கூட்டத்தின் நடுவே கூனிக்குறுகி அமர்ந்திருந்தாள் அந்த இளம்பெண்.

“யார் இவள்..? எதற்காக அனைவரும் ஒன்றுகூடி அடிக்க

மேலும்

உங்கள் கருத்து எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தோழமையே..! சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்தும் பார்வையிடப் படுகிறது எனில்,படைப்பாளிக்கு அதைவிட சிறந்த மகிழ்ச்சியளிக்கும் காரணம் வேறு தேவையா என்ன..? உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..! 08-Apr-2016 4:01 pm
உண்மையான ஒரு உயர்ந்த படைப்பு.நண்பருக்கு பாராட்டுகள். 08-Apr-2016 3:47 pm
எனது தோளின் மீது -உங்கள் ஆதரவுக் கரங்கள் என்றும் இருக்கும்போது,புதிய முயற்சிகள் செய்து பார்க்க,எனக்கு தயக்கமே இல்லை.நன்றி சங்கரன் அய்யா..,நன்றி ஈஸ்வர்..! 23-Dec-2011 8:09 pm
கிறிஸ்த்துமஸ் நாட்களில் மிக நல்ல கதை கேட்ட கதையானாலும் நீங்கள் சொல்லும் விதத்திற்காக ரசித்துப் படித்தேன் உங்களுக்கும் கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள் அபி ----அன்புடன்,கவின் சாரலன் 23-Dec-2011 7:20 pm
முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் அளித்த படைப்பில் (public) காளியப்பன் எசேக்கியல் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Mar-2016 8:29 pm

ஆம், பெங்களுரு என் காதலிதான், முதலில் வந்த தினம் பிப்-14 அப்பொழுது காதலர் தினம் கொண்டாடப்படும் வழக்கம் இல்லை, ஆசையாக பிழைப்பிற்காக வந்த ஊர், ஆண்டுகள் பல கடந்தவிட்டது, பலமுறை இங்கிருந்து வேலைக்காக வெளியேற நிர்பந்தம் ஏற்பட்ட பொழுதும் போராடி இங்கிருப்பதையே விரும்பி தக்கவைத்துக்கொண்டேன் ( அந்த அளவிற்கு இந்த பெங்களுருவின் மீது possessive ) ஆனால் எங்களையும் மீறி இந்த ஊரை விட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம், நிற்க, நான் சொல்ல வந்த விசயமே மொழியை பற்றித்தான் : கடந்த 14 நாட்களாக தொடரி மற்றும் பேருந்து என்று பெரும்பாலும் பயணத்திலேயே இருந்தேன், ( பெங்களுரு -

மேலும்

கட்டுரையை விட கருத்துக்கள் பெரியதாக வந்துள்ளது மிக்க மகிழ்ச்சி, மனம் திறந்த விரிவான கருத்திற்கு நன்றிகள் பல ப்ரியா - மு.ரா. 04-Apr-2016 4:38 pm
உண்மைதான் சார்....இன்றைய காலக்கட்டத்தில் எல்லாமே மாற்றத்தில்தான்......நம் தாய் மொழியோடு தாங்கள் கூறியது போல் இன்னும் பல மொழிகளைக்கற்றுக்கொண்டால் எங்கு சென்றாலும் பயமின்றி செல்லலாம் மற்றவர்களோடு பழகுவதிலும் கஷ்டம் இல்லை..... தமிளை மறந்துவிடாது....கூடவே பிற மொழிகளையும் கற்றுக்கொள்வதில் ஒன்றும் தவறில்லை அது முக்கியமும் தான்.... அனுபவத்தில் நாமே நிறையக்கற்றுக்கொண்டோம்.....இனி வரும் தலைமுறையினர் அனைத்திலும் தேர்ந்து விளங்குவார்கள்.... ஏன் இப்பவே மாற்றங்கள் நிறைய வந்து கொண்டிருக்கிறது.....இனி வரும் காலங்களில் தாங்கள் சொல்வது போன்று மாற்றம் வரும் என்றே நினைக்கிறேன்.....ஏனென்றால் இப்பவே ஹிந்தி,ஆங்கில,தமிழ் இதெல்லாம் ஒரு பாடமாக வருவதால் அவர்கள் படிப்பதற்கு எளிதாக உள்ளது அதுமட்டுமல்ல நிறைய பேர் தனியாகவே இன்று படிக்கின்றனர்.... ஹிந்தி ஆங்கிலம் போன்று எல்லா மொழிகளையும் கற்றிருப்பது சிறந்தது உண்மைதான்....//இனியாவது தாய் மொழியோடு மற்ற மொழியையும் அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுங்கள்//கண்டிப்பாகஐயா. ....!! 04-Apr-2016 3:23 pm
நிச்சயம் உங்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டியது ஐயா, எனக்கும் அப்படித்தான் இங்கு பெங்களுருவில் நாங்கள் அதிக நாள் வசித்த பகுதி ஒரு குட்டி தமிழ் நாடுதான்,( ramachandrapura , srirampura & okalipura ) மேலும் பெங்களுரு நகரத்தில் கூட 2002 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 45% தமிழ் பேசும் மக்கள், இந்த நிலையில் கன்னடம் கற்க வாய்ப்பு வேண்டுமானால் ஊருக்கு வெளியே இருக்கிற தொழிற் பேட்டையில் தான் கன்னடம் பேசக் கற்றுக்கொண்டேன், அப்படியே பேசினாலும் Dr கன்னியப்பன் ஐயா சொன்னது போல் நான் பேசும் கன்னட style ஐ பார்த்தவர்கள் நீங்கள் என்ன தமிழா என்று கண்டு பிடித்து விடுவார்கள் & மேலும் நீங்கள் சொன்னது போல் 1980 ன், ஆரம்பத்தில் நானும் எனது 2 நண்பர்களும் விக்கிரவாண்டியில் இருந்த ஒரு இந்தி ஆசிரியரிடம் எங்களுக்கு இந்தி சொல்லி கொடுக்க கேட்டுக்கொண்டோம் அவர் குறைந்த பட்சம் 10 மாணவர்களாவது வேண்டும் என்று நிபந்தனை விதித்தார், அந்த ஊரில் 10 பேருக்கு நாங்கள் எங்க போவது என்று சும்மா இருந்து விட்டோம், உங்களின் அனுபவ பகிர்வ்க்கும் / மேலான, விரிவான கருத்திற்கும் நன்றிகள் பல உரித்தாகுக - மு.ரா. 03-Apr-2016 8:25 am
அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, அதே நேரத்தில் முடிந்த அளவு அவசியமாக வேறு சில மொழிகளையும் கற்றுக்கொள்ள / கற்றுகொடுக்க வேண்டுகிறேன், தங்களின் மேலான கருத்திற்கு நன்றிகள் பல - மு.ரா. 03-Apr-2016 8:04 am
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) athinada மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Apr-2016 12:15 am

மீன்கார மாரி
பரிசல்கார காளி
ஒட்டக லோனு வேணுமா.?
*****************

“ஐந்தாண்டுக்கு முன்
ஆற்றில் போயிட்டாள் அம்மா”
“ஆறுனா என்னப்பா..?”
********************

எருமையை
வரைந்து முடித்தேன்
கொம்பால் முட்டுகிறது.
*****************

நிழலைக் கூட
அழிக்க முடியவில்லை
கொதிக்கிறான் சூரியன்
*************************

சுவரெங்கும்
பச்சை இலைகள்
உயிரற்ற சிரிப்பு
***********************

மலை பிளந்தவனுக்கு
விடுதலைக் கிரீடம்
மயங்குது நீதி
*********************

கழுத்தில் கத்தி
முழக்கம் எழவில்லை
தேசத்துரோகி
********************

பல்கலைக் கழகம்
ஒரேயொரு பாடம்
பாரத் மாதாகி ஜே
*

மேலும்

மிகவும் நன்றி அபி! 08-Apr-2016 10:19 pm
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..! 08-Apr-2016 3:58 pm
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..! 08-Apr-2016 3:57 pm
நிறைவுப் பகுதி உங்களை நிறைவடையச் செய்திருக்கிறது எனில்..எனக்கும் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி..! கருத்துக்கு மிக்க நன்றியும் அன்பும் ஜின்னா..! 08-Apr-2016 3:57 pm
பொள்ளாச்சி அபி - பொள்ளாச்சி அபி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2016 12:23 am

 வரவேற்கிறோம்.!  வாய்ப்புள்ள தோழர்கள் பங்கு பெறலாமே ..! 

அன்புடன் 
பொள்ளாச்சி அபி 

மேலும்

பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) Shyamala Rajasekar மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Apr-2016 12:15 am

மீன்கார மாரி
பரிசல்கார காளி
ஒட்டக லோனு வேணுமா.?
*****************

“ஐந்தாண்டுக்கு முன்
ஆற்றில் போயிட்டாள் அம்மா”
“ஆறுனா என்னப்பா..?”
********************

எருமையை
வரைந்து முடித்தேன்
கொம்பால் முட்டுகிறது.
*****************

நிழலைக் கூட
அழிக்க முடியவில்லை
கொதிக்கிறான் சூரியன்
*************************

சுவரெங்கும்
பச்சை இலைகள்
உயிரற்ற சிரிப்பு
***********************

மலை பிளந்தவனுக்கு
விடுதலைக் கிரீடம்
மயங்குது நீதி
*********************

கழுத்தில் கத்தி
முழக்கம் எழவில்லை
தேசத்துரோகி
********************

பல்கலைக் கழகம்
ஒரேயொரு பாடம்
பாரத் மாதாகி ஜே
*

மேலும்

மிகவும் நன்றி அபி! 08-Apr-2016 10:19 pm
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..! 08-Apr-2016 3:58 pm
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..! 08-Apr-2016 3:57 pm
நிறைவுப் பகுதி உங்களை நிறைவடையச் செய்திருக்கிறது எனில்..எனக்கும் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி..! கருத்துக்கு மிக்க நன்றியும் அன்பும் ஜின்னா..! 08-Apr-2016 3:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (320)

இவர் பின்தொடர்பவர்கள் (321)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
Jegan

Jegan

திருநெல்வேலி
கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா

இவரை பின்தொடர்பவர்கள் (322)

user photo

Madhushan

Colombo, Srilanka
acmsfa

acmsfa

kattankudy, sri lanka

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே