பெங்களுரு - என் காதலி

ஆம், பெங்களுரு என் காதலிதான், முதலில் வந்த தினம் பிப்-14 அப்பொழுது காதலர் தினம் கொண்டாடப்படும் வழக்கம் இல்லை, ஆசையாக பிழைப்பிற்காக வந்த ஊர், ஆண்டுகள் பல கடந்தவிட்டது, பலமுறை இங்கிருந்து வேலைக்காக வெளியேற நிர்பந்தம் ஏற்பட்ட பொழுதும் போராடி இங்கிருப்பதையே விரும்பி தக்கவைத்துக்கொண்டேன் ( அந்த அளவிற்கு இந்த பெங்களுருவின் மீது possessive ) ஆனால் எங்களையும் மீறி இந்த ஊரை விட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம், நிற்க, நான் சொல்ல வந்த விசயமே மொழியை பற்றித்தான் : கடந்த 14 நாட்களாக தொடரி மற்றும் பேருந்து என்று பெரும்பாலும் பயணத்திலேயே இருந்தேன், ( பெங்களுரு - சென்னை - ஈரோடு - திருச்சி - ஈரோடு - கோவை - ஈரோடு - பெங்களுரு ) தமிழ் நாட்டை பொருத்த வரை எனக்கு அதிக நேர்காணல் அனுபவம் இல்லை என்றாலும் இந்த முறை கொஞ்சம் வித்தியாசம்தான் நேர்காணலில் எல்லாம் முடிந்த பிறகு மொழி என்று வரும் பொழுது இரண்டு நிறுவனத்தில் ஹிந்தி தெரியுமா என்று கேட்டார்கள், நமக்கு தமிழே தகராறு இதுல எங்க ஹிந்தி - ஆதலினால் ஒரு வேண்டுகோள் தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் கேட்கிறேன், இனியாவது தாய் மொழியோடு மற்ற மொழியையும் அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுங்கள்.

எழுதியவர் : மு.ரா. (30-Mar-16, 8:29 pm)
பார்வை : 224

சிறந்த கட்டுரைகள்

மேலே