யாதுமாகி நின்றாள்- இணையத்தின் விளைவு மகளிரிடம்

முன்னுரை
"மங்கைய ராய்ப் பிறப்பதற் கேநல்ல
மாதவம் செய்திட வேண்டு மம்மா"
என்று கவிமணி பாடியுள்ளார். அதற்கேற்ப, ஒரு உயிரை உருவாக்கி, உயிரூட்டி, அதற்கு உருவம் கொடுத்துப் பத்துத் திங்கள் சுமந்து பெற்றெடுப்பவள் ஒரு பெண்ணேயாவாள். ஆனால், அக்காலப் பெண்கள் வாழ்ந்த விதம், இக்காலப் பெண்களுக்குப் பெருத்தமாக இல்லை. அதனால், அவர்கள் தனக்கு வேறு வழிகளை வகுத்துக்கொள்கின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

பெண்ணின் இயல்புகள்
நாமக்கல் கவிஞரின் பார்வையில், ஒரு பெண்ணாகப்பட்டவள், அனைவர் மீதும் அன்பும், நல்லவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வமும், தன்னடக்கமும் கொண்டவள். தனக்கேற்படும் துன்பங்களைப் பொறுத்துக்கொண்டும், சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொண்டும், அனைவரின் பார்வையிலும் உயர்ந்த இடத்தில் இருப்பவள். கணவனுக்கும், உடன்பிறந்தார்க்கும், பெற்றோர்க்கும், உறவினருக்கும் நல்ல துணையாய்த் திகழ்பவள். மகளாகவும், தமக்கையாகவும், தங்கையாகவும், தாரமாகவும், தாயாகவும் நின்று தரணியைத் தாங்குபவள்.

அக்காலப்பெண்கள்
அக்காலப் பெண்கள் அறியாமையில் மூழ்கியிருந்தனர். அடுப்படியிலும் கிணற்றடியிலும் தனது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூட அனுமதியின்றித் தவித்த காலமும் உண்டு. அதனால் வெளியுலகம் தெரியாமல் இருந்து விட்டனர். வீட்டினுள்ளே அடைந்து கிடந்ததால், பலவீனமும் ஆகிவிட்டனர். பொழுதுபோக்குகளைத் தங்கள் தினசரி வேலையாய்க் கொண்டனர். வீட்டு வேலைகள் செய்தும், வீட்டிலுள்ள மற்றவர்களைக் கவினித்துக்கொண்டும் தங்கள் காலத்தைத் தள்ளினர்.

இக்காலப் பெண்கள்
ஆனால் இக்காலத்தில், பெண் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தைரியமாக எவ்விடத்திற்கும் சென்று திரும்ப, மனவலிமையும் வளர்க்கப்பட்டுள்ளது. ஐடி கம்பெனிகளில் வேலை செய்ய இட ஒதுக்கீடுகள் நிறைய கிடைத்துள்ளது. சொல்லப்போனால், பெண்களுக்குத் தான் ஐடி கம்பெனிகளில் இடம் அதிகம். அவர்களின் அறிவாற்றல் கருதி செய்யப்பட்ட மாற்றம் இது. ஆடை பாதுகாப்பின்மை, இதன் பெரும் விளைவாக இருக்கிறது. கலாச்சர ஆடைகள் உடுத்த விரும்பாமல், ஆண்களும் பெண்களும் அந்நிய ஆடைகளுக்கு முழுவதுமாக மாறிவிட்டனர்.

இணையத்தின் விளைவு
மனிதர்கள் அனைவரும் இணையக்கூடிய 'வையக விரிவு வலை' அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது. இதனால் பல நன்மைகளும் தீமைகளும் உள்ளது.

நன்மைகள்:
1. இணையத்தின் வாயிலாக அனைவருடனும் தொடர்பில் இருக்கலாம்.
2. தேவையானவற்றை, சிறு நேரத்தில் பெற்றுவிடலாம்.
3. ஆன்லைன் ஷாப்பிங் இன்று மிகவும் எளிதாகிவிட்டது.
4. செய்திகள், சிக்கல்கள் முதலியவற்றைப் பெறலாம்.
5. கணினிவழிக்கல்வி நிகழ்த்தலாம்.

தீமைகள்:
1. எந்த அளவிற்குக் கணினி நல்லவற்றிற்குப் பயன் படுகிறதோ, அதே அளவிற்குத் தீயவற்றிற்கும் பயன்படுகிறது.
2. ஆன்லைன் ஷாப்பிங் ஆல் கவர்ப்படும் மக்கள், ரீடைல் கடைக்காரர்களை மறக்கின்றனர்.
3. தீயவற்றிற்குப் பயன்படும் இணையம், பல தீயவர்களுக்கும் அடைக்கலம் கொடுக்கிறது.
4. இணையத்தைப் பயன்படுத்துவதால் வரும் தீமைகள், ஒருவரின் வாழ்வியலாதாரத்தையே மாற்றக்கூடியது.

காக்கும் வழிமுறைகள்
பல ஐடி கம்பெனிகளில், பண்பாட்டு விழாக்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே பண்பாட்டை மறந்த மக்கள், இருக்கின்ற கொஞ்ச நஞ்சத்தையும் செய்ய முடியாமல் போகிறது. அதனைத் தடுக்க வேண்டும். சினிமாவில் ஆபாசப் பாடல்களில் அணியப்படும் ஆடைகள் மாற்றப்பட வேண்டும். இணையத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மக்களைக் கைப்பற்றுமாறு ஒரு செயலி உருவாக்கப்பட வேண்டும்.
காதலைக் குறித்தத் தவறான கருத்துகள் அகற்றப்பட வேண்டும்.

முடிவுரை
"இதற்காகத் தான் காத்தோம் முன்னரே
இன்றைய நிலை மாற்ற அன்றே!"

என்று பெரியவர்கள் கூறா வகையில், நாமக்கல்லாரின் வாக்குப்படி அனைத்தையும் அளவோடு பயன்படுத்தினால், ஆண்களுக்கும் நல்லது, பெண்களுக்கும் நல்லது.

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (30-Mar-16, 9:17 pm)
சேர்த்தது : ம அரவிந்த் சகாயன்
பார்வை : 1084

சிறந்த கட்டுரைகள்

மேலே