KS அம்பிகாவர்ஷினி - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  KS அம்பிகாவர்ஷினி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  23-Jun-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Aug-2012
பார்த்தவர்கள்:  5086
புள்ளி:  3161

என்னைப் பற்றி...

* நான் என்றும் நானாகத் தான் இருக்க முயற்சிக்கிறேன் *

என் படைப்புகள்
KS அம்பிகாவர்ஷினி செய்திகள்
KS அம்பிகாவர்ஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2016 9:50 am

மாதாந்திர வலியொன்றைச்
சுமக்கும் அடிவயிற்றில்
கலந்துவிட்டிருக்கும் உதிரமாய்
கழிவுபட்டிருக்கிறது
மன ஓட்டம்
அது சிடுசிடுவென
உண்ணத் துவங்குகிறது
சினக் குவியலுக்குள்
தொண்டையெடுத்ததாய்
தனிமைக்குத் தேவையற்ற
வெளிச்ச முகத்தைக் காட்டும்
தெருவிளக்கில்
மின்சாரமென அச்சுறுத்துகிறது
பின் தலை துவட்டிக் கொள்ளும்
அதன் ஈரநுனிகளில்
இரண்டிரண்டாய் வெட்டுப்படுகிறது
முட்டியில் பொதி சுமக்கும்
கழுதையெனக் கத்துகிறது
இரங்கலும் இனவாதமுமாய்
எடுத்தியம்பக் கேட்கும்
தன் குரலைத் தணித்துக்
கலவரமாகும்
அம்மன ஓட்டம்
பிரியம் கொண்டதாய்
உலகம் சுற்றத் திரளுகிறது
ஆக்கிரமிப்புகளைத் தவிர

மேலும்

எண்ணமற்ற மனம் பெறத்தான் எவ்வளவு போராட்டம்..!!நன்று..!! 12-Dec-2016 11:23 am
யதார்த்தமான வரிகள்.. 07-Oct-2016 10:43 am
KS அம்பிகாவர்ஷினி அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Jan-2016 11:17 am

சின்னச் சின்னதாய்.....!

எத்தனிக்கும் நினைவுகளின்
நிழல் விழுகின்ற
பக்கங்களில்
பூக்காத எழுத்துக்கள்
பெயர் தெரியாத
மடல்களுடன்
இனியும் எழுதாமல்
மூடி வைத்து
ரசிக்கப்படும் நாட்குறிப்பவன் ....

கானல் நீரொட்டி
நெருங்கும்
வாடிய கோடைக்கு
அதிர்ஷ்ட மழையென
அடிமனம் தோய்ப்பவன் ...

வளைந்தோடும்
கண்ணீர்த் துளிகள்
உடைய
தெளிந்தோடும் நீரோடையில்
புனிதமாய்க் கலக்கும்
கைவிரல் துடைப்பவன்...

விழிகளில்
வீணை மீட்டும்
மென்னுறக்க கீதத்தில்
அவனுள்
நான் மறக்கும்
நெற்றி முத்தமவன்...

பகல் வேண்டா
சூரியனும்
இரவெல்லாம் வேண்டும்
பௌர்ணமியும்
மூன்றாவதாய் கேட்கும்

மேலும்

ரசனை மிகுந்த படைப்பு . 08-Jun-2016 2:03 pm
புதியதொரு பயணமிது.....கவிதைகளை அழைத்துச் செல்லக்கூடியதாய்.... எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள் சார்.... 01-Mar-2016 9:09 pm
மிக்க நன்றி.... 01-Mar-2016 9:06 pm
மிக்க நன்றிகள் தோழி.... 01-Mar-2016 9:06 pm
KS அம்பிகாவர்ஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2016 9:00 pm

மயான வாசம்....!

ஒரு மௌனச் சோலைக்குள்
தற்காலிகமாய் நடைபயணம்
கைகள் நிறைய
திணிக்கப்படும் மௌனப்பூக்களோடு
வீடுதிரும்பினேன் ...

இன்னமும் வாட்டமில்லாத
அப்பூக்களை
வாசற்படிக்கு வெளியே
அலங்கரித்துவிட்டு நுழைகின்றேன்
எனக்கான வரவேற்ப்பில் முகம்சுளிப்பு !

குறுக்கு விசாரணைகளும்
குறுகிய விளக்கங்களும்
ஒன்றுக்கொன்று சமாதானமாகின்றன
அன்றைக்கு எனக்கான உணவில்
உப்புமில்லை காரமுமில்லை ...

அந்நியமாகத்
தெரிகின்றேன் அனைவருக்கும்
ஒட்டாத உறவாகவே
அனைத்தும் என்னை வெறுப்பதாய்
சலனத்தை ஒட்டிக்கொள்கிறேன் ...

பால்கனி விளிம்புகளில்
கரம்கேட்டுத் தொங்குகின்றது
முகமலர்ச்சி
கா

மேலும்

கதவைத் திறந்தேன் அங்கே மரணித்த மலர்களின் வாசங்களை நுகர்ந்து கொண்டிருந்தது காற்று இவைகளை எங்கே புதைப்பது ?!..................பிரமிப்பு !! 09-Mar-2016 8:50 pm
அற்புதமான பாடல் இது 05-Mar-2016 6:00 pm
//கதவைத் திறந்தேன் அங்கே மரணித்த மலர்களின் வாசங்களை நுகர்ந்து கொண்டிருந்தது காற்று இவைகளை எங்கே புதைப்பது ?! // மௌனத்தின் மயான வாசலில் மரணத்தின் பூவாசம்.. புலமியின் இந்தப் படைப்பின் தெரிவுக்கு மிக்க நன்றி கவித்தா ! வழ்த்துக்கள் புலமி ! 02-Mar-2016 1:16 pm
அருமை, வாழ்த்துக்கள். 02-Mar-2016 9:13 am
KS அம்பிகாவர்ஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2016 11:17 am

சின்னச் சின்னதாய்.....!

எத்தனிக்கும் நினைவுகளின்
நிழல் விழுகின்ற
பக்கங்களில்
பூக்காத எழுத்துக்கள்
பெயர் தெரியாத
மடல்களுடன்
இனியும் எழுதாமல்
மூடி வைத்து
ரசிக்கப்படும் நாட்குறிப்பவன் ....

கானல் நீரொட்டி
நெருங்கும்
வாடிய கோடைக்கு
அதிர்ஷ்ட மழையென
அடிமனம் தோய்ப்பவன் ...

வளைந்தோடும்
கண்ணீர்த் துளிகள்
உடைய
தெளிந்தோடும் நீரோடையில்
புனிதமாய்க் கலக்கும்
கைவிரல் துடைப்பவன்...

விழிகளில்
வீணை மீட்டும்
மென்னுறக்க கீதத்தில்
அவனுள்
நான் மறக்கும்
நெற்றி முத்தமவன்...

பகல் வேண்டா
சூரியனும்
இரவெல்லாம் வேண்டும்
பௌர்ணமியும்
மூன்றாவதாய் கேட்கும்

மேலும்

ரசனை மிகுந்த படைப்பு . 08-Jun-2016 2:03 pm
புதியதொரு பயணமிது.....கவிதைகளை அழைத்துச் செல்லக்கூடியதாய்.... எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள் சார்.... 01-Mar-2016 9:09 pm
மிக்க நன்றி.... 01-Mar-2016 9:06 pm
மிக்க நன்றிகள் தோழி.... 01-Mar-2016 9:06 pm
KS அம்பிகாவர்ஷினி - KS அம்பிகாவர்ஷினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2015 2:06 pm

அந்தக் குரலொன்றையே
ஒலிபெருக்கித் திருகி
விளையாடுகின்றது
இந்தியனென்ற உறுதிமொழி
புடைத்துக் கொள்ளும்
இதய வீக்கங்களில்......

போரெதுவும் அல்லாத
பேரமைதியில்
எங்கள் தமிழ் மரபாய்
வீட்டுக்கொருத் தலைமகனை
நேற்று பலிகொடுத்திருந்தோம்...

சதையும் எலும்புமான
கிறக்கம்
ஏற்றிய மெழுகுவர்த்தியில்
உயிராய்
உருகிக் கொண்டிருக்கின்றது....

உமக்கான
அஞ்சலிகள் எல்லாமும்
எமது கழுத்தினை இறுக்கும்
மரண மாலைகளாய்
விழுகின்றன....

காலனும் மேடையேறி
மரியாதை செய்துள்ளான்
விழவில்லை நீ
வேராகிப் படர்ந்திருக்கின்றாய்

கிழிபட்டுவிடுமோ
என்று
பசியினை மறந்து
காப்பாற்றிக் கொள்கின்றது
ஆற்றாமைக் காகிதமா

மேலும்

தனி மரம் தோப்பாகாது... யார் சொன்னது..!! தங்களது இக்கவியினை படிக்கும்போது ஆகிவிட்டது என நம்ப தோன்றுகிறது..!! 01-Nov-2015 4:57 pm
எந்தக் கவிதையிலும் உனகள் முத்திரை தனித்தே இருக்கும் .. தேடித் தேடித் பார்க்கிறேன் தெரியவில்லை நின் முகம். எழுதுங்கள் .. இயன்றவரை ..அவ்வப்போது ...! 26-Aug-2015 12:04 pm
நன்றி உங்களின் தகவலுக்கு 28-Jul-2015 9:31 pm
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே...சூரியன் மறையாத நாடு இங்கிலாந்து(,தி கிரேட் பிரிட்டன்)... 28-Jul-2015 7:49 pm
KS அம்பிகாவர்ஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2015 2:06 pm

அந்தக் குரலொன்றையே
ஒலிபெருக்கித் திருகி
விளையாடுகின்றது
இந்தியனென்ற உறுதிமொழி
புடைத்துக் கொள்ளும்
இதய வீக்கங்களில்......

போரெதுவும் அல்லாத
பேரமைதியில்
எங்கள் தமிழ் மரபாய்
வீட்டுக்கொருத் தலைமகனை
நேற்று பலிகொடுத்திருந்தோம்...

சதையும் எலும்புமான
கிறக்கம்
ஏற்றிய மெழுகுவர்த்தியில்
உயிராய்
உருகிக் கொண்டிருக்கின்றது....

உமக்கான
அஞ்சலிகள் எல்லாமும்
எமது கழுத்தினை இறுக்கும்
மரண மாலைகளாய்
விழுகின்றன....

காலனும் மேடையேறி
மரியாதை செய்துள்ளான்
விழவில்லை நீ
வேராகிப் படர்ந்திருக்கின்றாய்

கிழிபட்டுவிடுமோ
என்று
பசியினை மறந்து
காப்பாற்றிக் கொள்கின்றது
ஆற்றாமைக் காகிதமா

மேலும்

தனி மரம் தோப்பாகாது... யார் சொன்னது..!! தங்களது இக்கவியினை படிக்கும்போது ஆகிவிட்டது என நம்ப தோன்றுகிறது..!! 01-Nov-2015 4:57 pm
எந்தக் கவிதையிலும் உனகள் முத்திரை தனித்தே இருக்கும் .. தேடித் தேடித் பார்க்கிறேன் தெரியவில்லை நின் முகம். எழுதுங்கள் .. இயன்றவரை ..அவ்வப்போது ...! 26-Aug-2015 12:04 pm
நன்றி உங்களின் தகவலுக்கு 28-Jul-2015 9:31 pm
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே...சூரியன் மறையாத நாடு இங்கிலாந்து(,தி கிரேட் பிரிட்டன்)... 28-Jul-2015 7:49 pm
KS அம்பிகாவர்ஷினி அளித்த படைப்பில் (public) பாட்டாளிபுத்திரன் ருத்ரா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Jun-2015 3:55 pm

வழிதவறிய க்கியா க்கியாவின்
வெகுநேரத்திய தேடலில்
மலைத்திருந்தது
மந்தார வானிலை...

ஒலிப்பெருக்கியில்
"சின்னத் சின்ன தூரல் மின்ன"
பாடலில்
பிரபு கரைந்திருக்க
மேற்கு மலைத்தொடர் மேடையாகியிருந்தது...

அடங்கிய மண்வாசத்தில்
துளித் துளியாய்க்
கூவுகின்றது குயில்..

கூரை வேலிக்குள்
தொடர்ந்து களையெடுக்கின்றது
ஒற்றை ரோஜா ...

எதிர்பார்த்தபடியே அழைத்தாய்
மறந்துவிட்டதாக எண்ணி,
காபி போல...

வெளிர்ந்த வானத்தில்
மாதவிடாய் மேகம்
அடுக்களை தவிர்த்திருக்க,

பசித்த சங்கிலியின்
நீளத்தைக்
குறுக்கிக் கொண்டிருந்தது
நாய்க்குட்டி.....!

மேலும்

யதார்த்தங்களின் அர்த்த பரிமாணங்கள், அண்டம் போல் விரிந்துகொண்டே செல்பவை தான்....! இருப்பினும் வர்ஷினி, பிள்ளைமனமிது! தான் கண்ட பரிமாணம் மற்றையரும் கண்டதெனில் பூரித்துப் போகும் :) அந்த க்கியா, கோழிக்குஞ்சா? அட, அதன் முன்பின் தலை நகற்றலில் நடராசனின் குக்குட நடனத்தை மனத்தில் இருத்தி, கண்விரித்தது கார்மேகம் காணும் அழகில் லயித்துப்போனேன். தெளிவித்தமைக்கு நன்றிகள் :) :) 08-Jul-2015 9:09 am
வெளிர்ந்த வானத்தில் மாதவிடாய் மேகம்.... கற்பனை அருமை......... ரசணையும்........ 04-Jul-2015 10:30 pm
உங்கள் கருத்துக்களுக்கும் புரிதல்களுக்கும் மிகவும் நன்றி சுந்தர்... எதார்த்தங்கள் அர்த்த பரிமாணங்களைக் கொண்டவை என்பது தாங்களும் அறிந்ததே.... பிறகு க்கியா ... க்கியா..(கோழிக்குஞ்சு) 04-Jul-2015 10:26 pm
ஹஹ்ஹா நன்றி சார்....அழகான புரிதலுமாகவும் இருக்கும்.... 04-Jul-2015 10:21 pm
KS அம்பிகாவர்ஷினி அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2015 11:38 pm

சின்னஞ் சிறு கவளங்களாய்
என் காதலைப் பிசைந்து
ஊட்டுகின்றாய்-ஏனோ
பசியினை உணரவேயில்லை
விரல்களில்
உள்ளம் சமைக்குமுந்தன்
அடுத்த பிடிச்சோறில்
சிந்திச் சிதறுகின்றது அருகாமை..

ஒரு அடி
முன்னேறும் விழிகளில்
வேற்று மனித
மிருகமாய்ச் சிலாகித்து
நகங்களிழந்த பாதவிரல்களுக்கு
நீயே வழி(லி)யென்று
உணர மறுத்தவனாகின்ற
விருட்சத்தில்
எனது பற்றுக் கிளை ஒடிந்தது....

எனக்கென்ன
இதயத்தின் வேர்களில்
பூக்களா கிடைக்கும்
மண்ணுதிரக் கைகட்டியவனிடம்....

எந்த தேசத்திலும்
மனமோடு கூடுகட்டுவதே உறவு
கலைப்பதில்லையே
கனவாகிலும்....

காமமென்ன
காதலின் துணிச்சலா?
தேசிய அடையாளமா?
பிறப்புறுப்புத் தகுத

மேலும்

மிக்க நன்றி சார்.... தொடர் வாசிப்பிற்கும்..... 04-Jul-2015 10:17 pm
ஆற்று வளமா?! இல்லை ......நன்றி சர்ர்... 04-Jul-2015 10:15 pm
மிக்க நன்றி சார்... 04-Jul-2015 10:14 pm
மிக்க நன்றி சார்.... 04-Jul-2015 10:14 pm
KS அம்பிகாவர்ஷினி - rameshalam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2015 8:32 pm

பூ
உதிர்கிறது...

தன் சிறகுகளைப் பார்க்கிறது
வண்ணத்துப் பூச்சி.
*********************************************************************
மழை பெய்து கொண்டிருக்கிறது...

காகிதக் கப்பல்களில்
வருகிறது கடவுள்.
********************************************************************
வீடுகள் இரகசியங்களால் ஆனவை.
அதன் கற்களில் படிந்திருக்கக் கூடும்....
சில கேவல்களும்...சில கண்ணீர்த் துளிகளும்...
சில நேரங்களில்...
ஒரு குழந்தையின் சிரிப்பும் கூட.
*********************************************************************
வாழ்க்கை...
மழை நேரத்துக் கோப்பைத் தேனீர் அல்ல.
பொருந்தாத வேடங்களில்...
ஒவ்

மேலும்

ரொம்பவும் நன்றி! பாலாகாயத்ரி. 26-Jun-2015 5:41 pm
ரொம்பவும் நன்றி! கவிதாசபாபதி. 26-Jun-2015 5:41 pm
ஒவ்வொன்றும் மிக அழகு... 26-Jun-2015 5:24 pm
கூர்ந்து நோக்கின்.... பெரிய விஷயங்கள் .....! 23-Jun-2015 9:29 am
ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) சர் நா மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
23-May-2015 12:08 pm

வணக்கம் நண்பர்களே
நாளை ( இன்று இரவு 12 மணிக்கு ) பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி தொடங்குகிறது .
போட்டியின் முழு விவரங்கள் போட்டி பகுதியில் காண்க .

இளையவர் , மூத்தோர் ,தளத்தில் புதியவர் , தெரிந்தவர் , அறிந்தவர் , ஆடவர் , பெண்டிர் , மாணவர் என எல்லோரும் எழுத வேண்டி விரும்பி விண்ணப்பிக்கிறோம்.

இது ஒரு கற்றலும் , கற்பித்தலுக்குமான உங்கள் பெரிய பங்களிப்பு ...
தொடருங்கள்
ஆவலுடன்
அபி வாசகர் வட்டம்
............................................................................ (...)

மேலும்

எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் பதிக்கலாம் தோழமையே . ஒரு கதைக்கு ஒன்று என்ற முறையில் .. நன்றி . 24-May-2015 5:23 pm
மொத்த கதைகளுக்கும் சேர்த்து ஒரே பதிவாகவா அல்லது தனித் தனியேவாக பதிவிட வேண்டுமா... 24-May-2015 5:09 pm
rameshalam அளித்த படைப்பை (public) rameshalam மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
12-May-2015 6:23 pm

உன்னை எப்பொழுது பார்த்தேன்?
உறக்கம் தொலைந்து கூவுகிறது இருட்டு.
திறந்து வைத்த ஜன்னல்கள்
என்னோடு விழித்திருக்க....
நினைவுகளின் வரிசை குலைந்து சிடுக்குகள்.

பாதை சிக்கலாகி...
முடிவு நிச்சயமற்றதாகிவிட ...
இடம் பெயர்கிறது எனது நாட்கள்.
எனக்குள் தேங்கிவிட்ட உனக்கான சொற்கள்..
அலைந்து திரிகிறது இன்னமும்
காற்றில் அலையும் சிறகென.

நீ தவிர்க்க விரும்பாத
கோபத்தின் பின்னால்...
அலைகிறேன் ஒரு குழந்தையென.
காலியிடங்களை விட்டுச் செல்லும்
நம் காலத்தை நீ நிரப்ப முயல்கையில்...

என் குரல் உனக்கும் கேட்கக்கூடும்
ஒரு சிலந்தி வலையிலிருந்து.

மேலும்

ரொம்பவும் நன்றி! அஹமது அலி. 12-May-2015 9:16 pm
அண்ணாவின் வருகை மகிழ்ச்சி 12-May-2015 9:13 pm
ரொம்பவும் நன்றி! வெள்ளூர் ராஜா. 12-May-2015 7:04 pm
நீ தவிர்க்க விரும்பாத கோபத்தின் பின்னால்... அலைகிறேன் ஒரு குழந்தையென. காலியிடங்களை விட்டுச் செல்லும் நம் காலத்தை நீ நிரப்ப முயல்கையில்... என் குரல் உனக்கும் கேட்கக்கூடும் ஒரு சிலந்தி வலையிலிருந்து. -------------------------------------------------------- வாங்க வாங்க அய்யா. 12-May-2015 7:01 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தை (public) ராம் மூர்த்தி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
04-May-2015 11:29 am

ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்…

கவிதை எழுத வேண்டிய தலைப்பு-

இணையத் தமிழே இனி...கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-15-05-2015இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்… மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்…

போட்டியின் நெறிமுறைகள்1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை தோ்வு செய (...)

மேலும்

இது என் கடமை நண்பா!! நன்றியெல்லாம் சொல்லத்தேவையில்லை 05-May-2015 5:50 pm
நன்றி தோழரே.... போட்டிகள் பற்றிய தகவல்களுக்கு 05-May-2015 5:47 pm
இது என் கடமை நண்பா!! நன்றியெல்லாம் சொல்லத்தேவையில்லை 05-May-2015 2:03 pm
இந்த பொன்னான தகவலை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி தோழரே... 05-May-2015 11:52 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (46)

புதியகோடாங்கி

புதியகோடாங்கி

யாதும் ஊரே யாவரும் கேளீா்
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
சுகந்த்

சுகந்த்

தஞ்சாவூர்
அலமு

அலமு

தமிழ்நாடு,இந்தியா

இவர் பின்தொடர்பவர்கள் (46)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (47)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே