கார்த்திக் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கார்த்திக்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  17-Feb-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jan-2013
பார்த்தவர்கள்:  2938
புள்ளி:  1221

என்னைப் பற்றி...

வாழ்வினில் சமரசம் செய்வதை எதிர்ப்பதால் -நான் நம்பிக்கை
வீழ்ச்சி எப்போதும் என்னை துரத்துவதால் -நான் வெற்றி
அஞ்சினாலும் அடிகளை முன் எடுத்து வைப்பதால்-நான் தைரியம்
மற்றவர்களோடு என்னை ஒப்பிடாமல் இருப்பதால்-நான் தனித்துவம்
தாய்மையை கண்டு தலை வணங்குவதால் -நான் ஆண்மை
என்னைப்பற்றி நானே விமர்சித்துகொள்வதால் -நான் நேர்மை
பாதகத்தை எல்லாம் எனது சாதகமாக மாற்றுவதால் -நான் தந்திரம்
கற்றதை மேற்கோள் காட்டாது வாதிடுவதால் -நான் தர்க்கம்
ஏழ்மையை கண்டு மனம் இறங்காததால் -நான் கருணை
தவறினை கண்டு மனம் இறங்குவதால் -நான் தர்மம்
இயற்கையோடு அதிகம் பேசிட நினைப்பதால் -நான் மௌனம்
அனைத்துயிரையும் நேசிக்க நினைப்பதால் -நான் அஹிம்சை
மரணத்தை கண்டு ஏளனம் செய்வதால் -நான் வாழ்வு
இறைவனோடு என்னை இணைக்க நினைப்பதால் -நான் புதுமை
அடுத்தவர் உள்ளத்தில் இடம் பிடித்திட நினைப்பதால் -நான் நட்பு
நன்மைக்காய் பொய்மையை போற்ற துடிப்பதால் -நான்சத்தியம்

**********************************************************************************

 நானென்னும் மாயையை நடத்துவோன் நான் -மனதளவில்          
நான் ஒரு முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் - நடைமுறை பொருளியல் வாழ்கைக்காக  
நான் வாழ்த்துக்களை விட விமர்சனத்தயே அதிகம் விரும்புபவன் -ஏனேனில் அதில்தான் அதிகம் உண்மை இருக்கும் என்னையும் சிந்திக்க செய்யும்

  **********************************************************************************

உங்கள் வாழ்த்துகளை விட விமர்சனமே
என்னையும் கவியாக்கும்
என்ற ஒரு நோக்கத்திலே
எனது படைப்புகள்

என்றென்றும் அன்புடன்

கார்த்திக் -
திருநெல்வேலி

என் படைப்புகள்
கார்த்திக் செய்திகள்
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2018 9:41 pm

விழித்துளி பட்டு -மீண்டும்
உதித்தேன் பெண்னே
கனத்துக்கு கனம்
இன்பக்களிப்படி ....இருளென்ன
பகலென்ன ....பொழுதுகள்
யாவும் உனக்காய் உன் நினைவுகளில்
கழிக்கிறேன் ....வா கைக்கோர்த்து
வெகுதூரம் செல்வோம் ....
பிறப்பின் எச்சங்கள் பூமியில்
கிடக்கட்டும் ....
நம் இதயத்தின் சப்தங்கள்
விண்ணை அளக்கட்டும் ...
இன்றோடு நம் உயிர்க்கலப்பின்
ஓசைகள் கேட்டு ஒருவருடம்
கழிந்தது .....
ஓசையின் நீட்சியை
இன்னும் புதுப்பிப்போம்
இனிவரும் நாட்களில் மட்டுமல்ல
இணையப்போகும் பல
ஜென்மங்களிலும் .....

-உனக்காகவே என் மீனு

மேலும்

கார்த்திக் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2017 5:21 pm

நாம் ஏன் எழுதுகிறோம் ?

மேலும்

அருமை . நற்கருத்து . அறிஞர்தம் இதய ஓடை ஆழ்நீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் வெள்ளம் செழித்திட ஊற்றி ஊற்றி ----என்று பாடுவார் பாவேந்தர் . வாழ்த்துக்கள் சிந்தனைப்பிரிய கீர்த்தி 16-Jan-2018 9:11 am
மனிதனின் கற்பனை ஊற்றை மற்றவர்க்கு தெரிவிக்க வல்லதொரு கருவி எழுத்து.எனவே எழுதுகிறோம். 15-Jan-2018 12:02 pm
எழுதவதினால் மட்டும் சந்தோசம் கிடைத்துவிடுமா ? அல்லது மற்றவர்கள் அதை பாராட்டும் போது சந்தோசம் கிடைக்குமா ? சொல்லவும் சிந்தனைப்பிரிய முருகன் . 13-Jan-2018 2:37 pm
எழுத்தின் மூலம் கிடைக்கும் சந்தோசம் . 13-Jan-2018 4:32 am
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2017 7:40 pm

முகில் கொஞ்சிடும்
மலை முகடினில்
இளங்கதிர் கொஞ்சிடும்
பனிப்பூக்களில்....

வெயில்
தாங்கிய கற்பாறைகள்
மழை துளியினில்
கவிப்படித்திடும்....

வனக்குருவிகள்
வளம் வந்திடும்
குயில்கூட்டங்கள்
இசை அமைத்திடும் ...

மயிலாட்டங்கள்
அரங்கேறிடும்
அனல் மேகங்கள்
இளைப்பாறிடும் ....

சிறகடித்தலில் சிறை
பிடித்திட சிலப்பறவைகள்
காற்றிடையே
விளையாடிடும் ....

புதுப்பூக்கள் மணம்பரப்பிடும்
இளமாங்கனிகள்
தேன் செறிந்திடும் ...

நெடும் பயணமும்
உன் நினைவுகளும்
உயிர்க்கூச்சலில்
உரையாடிடும்
உயிரோவிய எனதழகே ....

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2017 10:23 pm

அன்பின்
கால மேகம் காதல்
பூக்கச் செய்ததோ
காதல் வானில் -என்னை
ஏற்றி செல்லுதோ.....

உன்
மழலை மொழியில்
நீ பேசுகின்ற வார்த்தைகள்
என் மௌன காட்டில்
தீயை மூட்டி போகுதோ....

இரவில்
பிறை சூடிய இளம்வான
நேரத்தில் மகிழ்த்தாரகை
பனிதெளித்திடும் காலத்தில் -அந்தரங்க
வார்த்தைகள் பரிமாறுதோ ....

இறைவன்
கருந்துளையின் அலைக்கற்றை
எடுத்தானோ உன் கழுத்தினில்
மச்சம் என வைத்தானோ-அதில்
என் சித்தங்களை இறுக்கி தைத்தானோ.....

சுகமான
கோடி பூக்களை என்னுள்
பூக்கவைத்தவளே வானம்
கெஞ்சிடும் அழகுடன்
வந்து நின்றவளே......

நினைவில்
நிஜமாய் நீ இருக்க
நிஜத்தில் நிழல் போல் இருப்

மேலும்

சூப்பர் கார்த்திக்... 14-Jun-2017 7:16 pm
கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2017 4:41 pm

மின்னல் பூக்கள் கண்ணில் தெரியுதடி
நெஞ்சில் வெப்பம் அனலாய் கொதிக்குதடி
உயிரின் கூட்டம் உனக்காய் முந்துதடி
மழையின் சாரல் மனதில் அடிக்குதடி

விழியன் ஏக்கம் வெளியில் தெரியுதடி
களியாட்டம் போட நெஞ்சம் ஏங்குதடி
புதுவழியில் எல்லாம் பூக்கள் தூவுதடி -நெஞ்சின்
வலிகளெல்லாம் புகைபோல் மறையுதடி

சிந்திடும் சிரிப்பினில் சிந்தை மயங்குதடி-கொஞ்சி
பேசுகையில் கெஞ்சவும் தோன்றுதடி -நீ
'டா' வென்னும் போதில் டமருகம் இசைக்குதடி
காலமுள்தான் கரைந்தே போகுதடி

தினம்தினம் நீளும் இரவுகள் நிறைவை தருகுதடி
மென் மேலும் நீண்டிட பகலிடம் கெஞ்சுதடி
எதிர்காலமொழிகள் கதைக்காமல் இருக்குதடி
அருகினில் கோலமயில

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2017 4:41 pm

மின்னல் பூக்கள் கண்ணில் தெரியுதடி
நெஞ்சில் வெப்பம் அனலாய் கொதிக்குதடி
உயிரின் கூட்டம் உனக்காய் முந்துதடி
மழையின் சாரல் மனதில் அடிக்குதடி

விழியன் ஏக்கம் வெளியில் தெரியுதடி
களியாட்டம் போட நெஞ்சம் ஏங்குதடி
புதுவழியில் எல்லாம் பூக்கள் தூவுதடி -நெஞ்சின்
வலிகளெல்லாம் புகைபோல் மறையுதடி

சிந்திடும் சிரிப்பினில் சிந்தை மயங்குதடி-கொஞ்சி
பேசுகையில் கெஞ்சவும் தோன்றுதடி -நீ
'டா' வென்னும் போதில் டமருகம் இசைக்குதடி
காலமுள்தான் கரைந்தே போகுதடி

தினம்தினம் நீளும் இரவுகள் நிறைவை தருகுதடி
மென் மேலும் நீண்டிட பகலிடம் கெஞ்சுதடி
எதிர்காலமொழிகள் கதைக்காமல் இருக்குதடி
அருகினில் கோலமயில

மேலும்

கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2017 7:36 pm

உன்னை சந்தித்த வேலைகள்
உள்ளக்கிடக்கைகள் உதிரி பாகங்களாய்
உதிர்ந்துதான் போகின !!!

அள்ளி அணைக்கத்தான் தோன்றியது முதலில்
அடக்கி கொண்டஎன் பெண்னே....
கைக்குழந்தையின் புன்னகை சிந்தினாயே
அதை மட்டுமே ரசித்து வந்த
ஆவல் என்றால் நீ நம்பவா போகிறாய் .....

நேரெதிரே அமர்ந்த போது
என் வியர்வை துளிகள் முதல்முதலாய்
வாசனை திரவியத்தை பூசிக்கொண்டது ....

உன் புடவையில் நெய்யப்பட்ட சாயமும்
என் புத்திக்கு பிடித்த சாயமும்
நாம் இருவரும் ஒத்துப்போவதுக்கு
முன்னவே ஒன்று கலந்துவிட்டன .....

உன் ஊதா புடவையில் சிக்கிய
என்உ யிரை உனக்கு எப்படி உணர்த்துவது?
தனியாக பேசவும் தயங்கித்தான்
கிடந்த

மேலும்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த கேள்வியில் (public) muraiyer69 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Jan-2017 10:02 am

01.ஜல்லிக்கட்டு தடை விதிப்பில் மறைமுக அரசியல் இருக்கிறதா?

02.மதவாதம்,இனவாதம் பேச ஆட்சியாளர்கள் கையாண்ட தந்திரமா பீட்டா அமைப்பு?

03.பல அரசியல் வாதிகளின் பண்ணையில் நாளும் இறைச்சிக்காக 16000 - 17000 மாடுகள் கொல்லப்பட்டதை
வாய் பொத்தி காக்கும் அமைப்புக்கள் வெறுமெனே 30 - 50 மாடுகள் கொண்டு ஆடப்படும் ஜல்லிக்கட்டை நீக்கம் செய்தமை மரபின் மாண்பை மறைக்க கையாண்ட வழிமுறையா?

மேலும்

மறைமுகமாக மக்களை ஏமாற்றி வெளித்தோற்றத்தில் காப்பதாக வேஷம் போடுகிறது நிகழ்கால அரசியல்.அறிவுள்ள சமூகமும் அரசியலின் ஏமாற்றங்களை போராட்டம் மூலம் தட்டிக்கேட்க மறுத்து விடுகின்றது.சட்டங்கள் எல்லாம் அதிகாரம் இருப்பவர் கையில் அநீதியாக இருப்பிலும் நீதியாக மாற்றி எழுதப்படுகிறது.காலத்தை சிந்திக்கும் போது ஆயிரம் கலகங்கள் எம் முன்னே தோன்றி வளர்ச்சி அடைந்து கொண்டிருக்க அதனை கூட அறியாத நிலையில் மக்களின் வாழ்வியல் நாளும் நகர்கின்றது..விழிப்பே மக்களின் உரிமையை என்றும் காக்கும் 08-Feb-2017 9:58 am
ஜல்லிக்கட்டு தடை இதில் எவ்வித ஐயமும் இல்லை அரசியல் பெரிய அளவில் இருக்கிறது இதுவே கசப்பான உண்மை அரசியல் என்பது மக்களுக்காகத்தான் மக்களின் விருப்புக்கு மதிப்பளிக்காது அரசியலை எப்படி சொல்வது? நடைமுறையில் வர்த்தக நோக்கத்தோடு செயற்படும் நிறுவனங்கள் தங்களின் போட்டிக்கு எதிராக இருப்பவையை இல்லமால் செய்வது தான் அவர்கள் வேலை அவர்கள் அதற்காக எந்த அளவுக்கும் போக கூடியவர்கள் பின்னணி யில் அவர்களும் இருந்து இருக்கலாம் அதனால் பெரும் தொகை பணம் அரசியல் வாதிகளுக்கு வழங்கி இருக்கலாம் 02-Feb-2017 9:32 am
கருத்தளித்தமைக்கு நன்றிகள் 31-Jan-2017 5:32 pm
ஆம் 31-Jan-2017 12:46 pm
கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2017 8:15 pm

எழுதியவர் : மருதன்
கட்டுரை :ஆனந்த விகடன்

டொனால்ட் ட்ரம்ப்பின் வருகையோடு பிறந்திருக்கிறது 2017. சர்வதேச அரசியல் எந்தப் பாதையை நோக்கிச் செல்கிறது என்பதற்கு ட்ரம்ப்பின் வருகை மிக முக்கியமான குறியீடு. 2017-ம் ஆண்டில் உலகம் மிக முக்கியமான ஐந்து பிரச்னைகளைச் சந்திக்க இருக்கிறது. எதிர்காலம் என்பது இறந்த காலத்தின் தொடர்ச்சியே என்பதால், சென்ற ஆண்டின் தீர்க்கப்படாத பிரச்னைகள் அனைத்தும் இந்த ஆண்டு மேலும் பலம்பெற்று, நம்மை அச்சுறுத்தும். இந்த அச்சுறுத்தலைப் போக்க என்ன வழி?

போரும்... சமாதானமும்...

‘வரலாறு காணாத கிரிமினல் தாக்குதல்கள் சிரியாவின் மீது நடத்தப்பட்டுள்ளன’ என ஒப்புக்கொள்கிறது ஐ.நா

மேலும்

கார்த்திக் - பாலசுப்பிரமணி மூர்த்தி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2017 5:57 pm

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களும் இளைஞர்களும் அறவழியில் போராடி வெற்றிபெற்ற பிறகு பிரிவினைவாதம் என்னும் நோய் பரவ தொடங்கியிருக்கிறது இதற்கு காரணம் என்ன????

மேலும்

அருமை ....நிதர்சனம் இதுவே ....ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஆதரிக்கவே கூடாது. 28-Jan-2017 10:11 pm
உள்ளூர் முதல் உலக அரசியல் , வெளிநாட்டு வியாபாரம் மட்டுமே காரணம் 28-Jan-2017 7:43 pm
சரியாக சொன்னீர் .....! 28-Jan-2017 4:42 pm
அடுத்த எழுச்சியை அடக்க நடக்கும் தந்திரமாம் 28-Jan-2017 4:49 am
கார்த்திக் - அன்புடன் மித்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2017 2:32 am

உலகில் எந்தவொரு மனிதனாலும் விலை கொடுத்து வாங்கி தப்பித்துக் கொள்ள முடியாத, மாற்ற முடியாத உண்மை எது?

மேலும்

இயற்கை (விலை கொடுத்து வாங்கவும் முடியாது ,தப்பிக்கவும் முடியாது,மாற்றவும் முடியாது ) 28-Jan-2017 7:41 pm
உடல் தளர்ந்தும் உயிர் உணர்த்தும் கலவி இல்லா காதல் தான் உண்மை .... 27-Jan-2017 3:40 pm
கார்த்திக் - கார்த்திக் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
29-Dec-2016 8:03 pm

நாம் ஏன் உணவு முறை குறித்து கவலை கொள்வதில்லை ?ஹைபிரிட் பயிர்களால் ஏற்படும் ஆபத்து குறித்து ஏன் மேல்தட்டு மக்கள் முதல் கீழ்த்தட்டு மக்கள் வரை விழிப்புணர்வின்றி இருக்கிறார்கள் ?இதற்கு தீர்வு என்ன ?

மேலும்

இயற்க்கை எனும் பகுதியில் இதற்க்காண விடை கவிதையாக உள்ளது ..... படாமல்..... 04-Jan-2017 2:35 pm
அறிவியல் ரீதியாக என்பதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன் ....சிந்திப்போம் அய்யா ....நன்றி பதிலுக்கு 03-Jan-2017 1:43 pm
ஹைபிரிட் தான் இன்றைய அணைத்து நோய்களுக்கும் காரணம் என்பது என் தாழ்மையான கருத்து....விரைவில் இது குறித்து மேலும் சிந்திப்போம் ....நன்றி ஆக்கமிக்க பதிலுக்கு 03-Jan-2017 1:42 pm
முயற்சிக்கிறான்-முயற்சிக்கிறேன் 03-Jan-2017 1:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (197)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (198)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
krishnan hari

krishnan hari

chennai
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (198)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
poet vamshi

poet vamshi

srilanka
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
மேலே