என் இதய டாலுவுக்காய் 1
உன்னை சந்தித்த வேலைகள்
உள்ளக்கிடக்கைகள் உதிரி பாகங்களாய்
உதிர்ந்துதான் போகின !!!
அள்ளி அணைக்கத்தான் தோன்றியது முதலில்
அடக்கி கொண்டஎன் பெண்னே....
கைக்குழந்தையின் புன்னகை சிந்தினாயே
அதை மட்டுமே ரசித்து வந்த
ஆவல் என்றால் நீ நம்பவா போகிறாய் .....
நேரெதிரே அமர்ந்த போது
என் வியர்வை துளிகள் முதல்முதலாய்
வாசனை திரவியத்தை பூசிக்கொண்டது ....
உன் புடவையில் நெய்யப்பட்ட சாயமும்
என் புத்திக்கு பிடித்த சாயமும்
நாம் இருவரும் ஒத்துப்போவதுக்கு
முன்னவே ஒன்று கலந்துவிட்டன .....
உன் ஊதா புடவையில் சிக்கிய
என்உ யிரை உனக்கு எப்படி உணர்த்துவது?
தனியாக பேசவும் தயங்கித்தான்
கிடந்தேன் பெண்னே ......
மீண்டும் மீண்டும் யோசித்தேன்
பாவம் புத்தி ,
இப்போதும் விதிதான்
வென்றது ....
நீதான் என்னவள் என்று எழுதி
வைத்து சென்றது ....
(தொடரும் )