என் இதய டாலுவுக்காய் 2

மின்னல் பூக்கள் கண்ணில் தெரியுதடி
நெஞ்சில் வெப்பம் அனலாய் கொதிக்குதடி
உயிரின் கூட்டம் உனக்காய் முந்துதடி
மழையின் சாரல் மனதில் அடிக்குதடி

விழியன் ஏக்கம் வெளியில் தெரியுதடி
களியாட்டம் போட நெஞ்சம் ஏங்குதடி
புதுவழியில் எல்லாம் பூக்கள் தூவுதடி -நெஞ்சின்
வலிகளெல்லாம் புகைபோல் மறையுதடி

சிந்திடும் சிரிப்பினில் சிந்தை மயங்குதடி-கொஞ்சி
பேசுகையில் கெஞ்சவும் தோன்றுதடி -நீ
'டா' வென்னும் போதில் டமருகம் இசைக்குதடி
காலமுள்தான் கரைந்தே போகுதடி

தினம்தினம் நீளும் இரவுகள் நிறைவை தருகுதடி
மென் மேலும் நீண்டிட பகலிடம் கெஞ்சுதடி
எதிர்காலமொழிகள் கதைக்காமல் இருக்குதடி
அருகினில் கோலமயிலே உனைக்காண ஏங்குதடி

எழுதியவர் : கார்த்திக் -திருநெல்வேலி (11-Jun-17, 4:41 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 92

மேலே