ஜீவிதம் முழுதும் எனக்கு ஜீவனாய் நீ வேன்டும்

அரிவையர் நந்தவனத்தில் கிரீடம் சூடிய
நிலாத்தாயின் அழகு மகள்
கோடை நாளில் தரிசனம் தந்தாள்
நீரில்லா வாடும் நெற்பயிராய் வாடும் என்உடலுக்கு
தரிசன மழை பொழிந்தாள்
வாஞ்சை விழியால் மொழிகள்பல சொன்னாள்
அன்பாய் வழிந்தாள் அமிர்தம் பிழிந்தாள்
ஒவ்வொரு நாளும் உளம் நாடியது அவள்முகம்

அவள் வந்தால் அருகே நின்றால்
சூரியனைக் கண்டதும் சிரிக்கும் தாமரையாய்
மலர்ந்தது என் முகம்
என்பை போர்த்திய என்னுடலம் நுழைந்து
இதய வீட்டில் இருக்கை அமைத்தவளே
வெப்ப நாளில் தகிக்கும் இரும்பாய்
உன்னை நினைத்து உருகுது என்னுடல்
என் ஏக்கம் தீர்ப்பாயா என் சோகம் தடுப்பாயா
தென்றல் காற்றாய் தினமும் என்னுடன் நீ வேண்டும்
காலம் முழுக்க கைகோர்த்து என்னுடன் வர வேண்டும்
ஜீவிதம் முழுவதும் எனக்கு நீ ஜீவன் தர நீ வேண்டும்
தருவாயா என்னவளே

ஆக்கம்
அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (11-Jun-17, 3:26 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 192

மேலே