என் இதய மீனுவுக்காய்

விழித்துளி பட்டு -மீண்டும்
உதித்தேன் பெண்னே
கனத்துக்கு கனம்
இன்பக்களிப்படி ....இருளென்ன
பகலென்ன ....பொழுதுகள்
யாவும் உனக்காய் உன் நினைவுகளில்
கழிக்கிறேன் ....வா கைக்கோர்த்து
வெகுதூரம் செல்வோம் ....
பிறப்பின் எச்சங்கள் பூமியில்
கிடக்கட்டும் ....
நம் இதயத்தின் சப்தங்கள்
விண்ணை அளக்கட்டும் ...
இன்றோடு நம் உயிர்க்கலப்பின்
ஓசைகள் கேட்டு ஒருவருடம்
கழிந்தது .....
ஓசையின் நீட்சியை
இன்னும் புதுப்பிப்போம்
இனிவரும் நாட்களில் மட்டுமல்ல
இணையப்போகும் பல
ஜென்மங்களிலும் .....

-உனக்காகவே என் மீனு

எழுதியவர் : கார்த்திக் (2-Jul-18, 9:41 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 80

மேலே