MURUGAN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : MURUGAN |
இடம் | : BOISSy - SAINT - LEGER |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 346 |
புள்ளி | : 19 |
மங்கையாக பூப்பெய்திய புதுமலரே….
உனது கனவுகளை நிறைவேற்றிட ..….
மடந்தைபருவத்தில் கல்வியெனும் உரமிட்டிட..
மெய்யெனும் கரம் கொண்டு உழைத்திடு பெண்ணே ….
அரிவைக்காலத்தில் பாரதி கண்ட புதுமை பெண்ணாய்…
புயலென புறப்படு பெண்ணே……..
தெரிவைப்பருவத்தில் தேசமே கொண்டாடிடும் …..
பாடிடும் உன் புகழை மகளே……
பேரிளம் பெண்ணாய் அகிலமே ….
போற்றிட…..புகழ் பெற்றிட….
பெருமை சேர்த்த்திடு உனது பெற்றோர்க்கு ..
பல தடைகளை கடந்து …..
கல்வியெனும் அடித்தளமிட்டு …..
அன்பெனும் கல் கொண்டு……
வசதியாக வடிவமைத்திட்ட இல்லத்தில்……
ஆனந்தமாய் பெற்றோர் வாழ்த்திட …..
ஊர் எல்லாம் போற்றிட ….
ஏற்றம் பல கண்டிட …..
சகல ஐஸ்வரியமும் பொங்கிட ……
ஒளிமயமான வெற்றிகளை குவித்திட…..
முத்தமிழ் போல் நிறைவாக புதுமனையில் …..
வாழ்க……..வளர்க…….
மனதில் ஒருவரால் குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் என்ன? ( அனால் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்)
முக்காலி,நாற்காலி என்பதுபோல் ஆறுகால் கொண்டதை அறுகாலி என்றும் எட்டுகால் கொண்டதை எண்காலி என்றும் அழைப்பதில் என்ன தவறு?
அன்பெனும் ஒளியினை ஏந்தி இம்மண்ணில் உதித்தவர்!
வானத்தைப்போல் பரந்த மனமும், பாசமும் நிறைந்தவர்
அழகாய் அறிவுரை போதிப்பார் !
பண்பாய் பாடம் கற்பிப்பார் !
எங்களது ஆசைகளை நிறைவேற்ற தனது
ஆசைகளை தொலைத்தவர்!
அழகாய் அவர் வாழ்ந்து காட்டுகிற வாழ்க்கை
எங்களுக்கு விலை மதிக்க முடியாத பரிசுப்பொருட்கள் !
அப்பேற்பட்ட மகானை "தந்தை" "தகப்பனார்" "ஐயன் "
"அப்பா" "தாயுமானவர்" "பிதா" இவை எல்லாவற்றையும் சேர்த்து
ஒரு வார்த்தை கிடைக்குமானால் அதுவே "பொருந்தும்" எங்களத
பெரு நிறுவனங்களின் கூடாரமாகிற இத்தருணத்தில்....
அலையடித்து கொண்டிருக்கும் கணனி காலத்தில் ......
அந்நிய தேசத்திற்காக கண்விழித்து,காசு பார்க்கும் சூழ்நிலையில் ....
போராடி வாங்கிய 8 மணிநேரத்தை மறந்த நேரத்தில் .....
உள்ளத்தில் உறுதிகொண்டு ஒற்றுமையுடன் .........
உழைத்திடும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள் ..................
எண்ணம் காணொளி போட்டி
தோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017
தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
- காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
- ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
- சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
காணொளி சமர்ப்பிக்க:
- எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
- பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
- அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
- Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
- உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
பனித்துளி வெண் பூக்களாய் பொழிய
குயில்களின் குதூகல இன்னிசை ஒலிக்க
தோகை விரித்தாடும் மயில்களின் மனதோடு
மனம் சில்லென்று சிறகடிக்க
உறவோடும்,நட்போடும் புதிய ஆண்டினை
உலகில் அன்பெனும் ஒளி வீசவேண்டுமென
இறைவனை இறைந்து பொலிவுடன் வரவேற்போம் .
நடராஜர் துதி
ஆனந்தம்,ஆனந்தம் நடராஜா
ஆனந்த தாண்டவம் ஆடிடும் மூர்த்தியே நடராஜா
ஆனந்தம்,ஆனந்தம் நடராஜா
ஆனந்த தாண்டவம் ஆடிடும் மூர்த்தியே நடராஜா
ஆகாய வடிவே நடராஜா
அம்பல அரசனே நடராஜா
அகிலம் காத்திடும் அப்பனே நடராஜா
அருட்பெரும் ஜோதியே நடராஜா
அன்புடன் உன்னடி வந்தோம்