எண்ணம் காணொளி போட்டி தோழர்களுக்கு வணக்கம்! எழுத்து நடத்தும்...
எண்ணம் காணொளி போட்டி
தோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017
தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
- காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
- ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
- சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
காணொளி சமர்ப்பிக்க:
- எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
- பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
- அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
- Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
- உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்