எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏழைச் சிறுவனின் ஏக்கம்..! ====================== உருளுகின்ற இவ்வுலகில் உழைக்கும்...

ஏழைச் சிறுவனின் ஏக்கம்..!

======================


உருளுகின்ற இவ்வுலகில் உழைக்கும் வர்க்கமாய்
.. ..........உழல்பவர்கள் ஏராளம்.! அதிலும் உழைக்காமலே..
பொருளீட்டும் மாந்தரும் உண்டாம் இவர்களின்
.. ..........இருட்டு மனதிலேயாம் வெளிச்சம் தேடுகிறோம்.!
மருண்டே வாழ்ந்து மண்ணில் மடிவதுதானெம்
.. ..........மக்களின் தலையில் எழுதியதலை விதிபோலாம்.!
அருளுகின்ற இறைவனும் ஏழை எமக்கென்றே
.. ..........ஆரோக்கியமும் பிள்ளைச் செல்வமும் அருளினான்.!

ஆனால்..

பள்ளிசெல்லும் எண்ணமே சத்துணவுக் காகத்தான்
.. ..........படிப்பிலே கவனமிலாப் பலசோலி எங்களுக்குண்டு.!
வெள்ளி முளைக்குமுன் வேகமாய் செயல்புரிந்தே
.. ..........வதைக்கும் உழைப்பால் படிப்பினில் நாட்டமில்லை,!
பிள்ளையாய் இருக்கும்போதே இடுப்பில் இன்னொரு
.. ..........பிள்ளையைச் சுமக்க வேண்டுமா ஏழ்மையென்பதால்,!
 கள்ளமிலா மனதோடு கல்விகற்க ஆசைதானால்
.. ..........சல்லாபமாய் வாழநினையின் சங்கடமே வருகிறது,!

அப்பனும் ஆத்தாளுமில்லை அரவணைத்து வளர்க்க
.. ..........ஆதரவாய் உற்றோர் உறவினருமென எவருமிலை.!
தப்பேதும் செய்யாமலே தண்டனை மிகப்பெரிதோ
.. ..........தகும்நூலைப் படித்துயர ஒருபோதும் வழியில்லை.!
 எப்படி வாழ்வதென எண்ணியெ கலங்குகின்றோம்
.. ..........எங்கள் கடமைகளை அனுதினமும் செய்கின்றோம்.!
 இப்பாரினில் ஏழ்மைக் குழந்தைபடும் துயரம்போல்
.. ..........எவருக்குமே வராதென.....அருள்வாயா இறைவா..? 

====================================================

  படம்பார்த்துக் கவிதை எழுதும் வகையில் அமைந்ததொரு காட்சியைக் கறுப்புவெள்ளையில் ஒளிஓவியமாய்த் தீட்டியிருக்கும் தொழில்நுட்ப வல்லுநர் திரு. கோகுல்நாத், இதனைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் முதலில் என் இனிய நன்றி!

அடுத்ததாக, இந்த வாரம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை “சிறந்த கவிஞர்” எனும் பட்டத்தை நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தியிடமிருந்து பெருவதை பெருமையுடன் ஏற்கிறேன்.  

நாள் : 18-Sep-17, 11:40 am

மேலே