எண்ணம்
(Eluthu Ennam)
எண்ணம் காணொளி போட்டி முடிவு
எண்ணம் காணொளி போட்டியின் வெற்றியாளர் lakshmi.P.R
படைப்பு: https://eluthu.com/view-ennam/35817
வாழ்த்துக்கள்!
உங்களுக்கு சிறப்பு பரிசு ஒன்று உங்கள் இல்லம் தேடி வரும்.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
புது யுகம் காண்போம்
புதியன புகுத்துவோம்
புதிய தலைமுறை வரவேற்போம்
பாராட்டுக்கள் 20-Mar-2018 1:34 pm
வாழ்த்துக்கள் வீணை வாசித்து கொண்டிருப்பவருக்கு வயதை பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப்போனேன். 05-Oct-2017 12:42 am
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.., 30-Sep-2017 11:28 am
எண்ணம் காணொளி போட்டி இறுதி நாள் செப்டம்பர் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
100 புள்ளிகள் பெற்றவர் மட்டுமே காணொளி சமர்ப்பிக்க முடியும் என்பதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இனி அனைவரும் காணொளி சமர்ப்பிக்கலாம்.
சிரமங்கள் இருப்பின் தெரிவுபடுத்தவும்.
எண்ணம் காணொளி போட்டிதோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி... (கீத்ஸ்)
18-Sep-2017 12:33 pm
எண்ணம் காணொளி போட்டி
தோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017
தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
- காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
- ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
- சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
காணொளி சமர்ப்பிக்க:
- எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
- பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
- அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
- Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
- உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில்
ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக்
கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am