அப்பா

அன்பெனும் ஒளியினை ஏந்தி இம்மண்ணில் உதித்தவர்!
வானத்தைப்போல் பரந்த மனமும், பாசமும் நிறைந்தவர்
அழகாய் அறிவுரை போதிப்பார் !
பண்பாய் பாடம் கற்பிப்பார் !
எங்களது ஆசைகளை நிறைவேற்ற தனது
ஆசைகளை தொலைத்தவர்!
அழகாய் அவர் வாழ்ந்து காட்டுகிற வாழ்க்கை
எங்களுக்கு விலை மதிக்க முடியாத பரிசுப்பொருட்கள் !
அப்பேற்பட்ட மகானை "தந்தை" "தகப்பனார்" "ஐயன் "
"அப்பா" "தாயுமானவர்" "பிதா" இவை எல்லாவற்றையும் சேர்த்து
ஒரு வார்த்தை கிடைக்குமானால் அதுவே "பொருந்தும்" எங்களது
பாசத்துக்கும்,அன்பிற்கும் உரிய,
எங்களுக்கு உயிர் தந்தவருக்கு.

எழுதியவர் : மங்களம் சத்தியநாராயணன் (2-Jul-18, 2:53 am)
Tanglish : appa
பார்வை : 2510

மேலே