கண் பற்றி ஒரு கவிதை

👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

*கண்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

#கண்

காதலின்
நுழைவு வாயில்.....!

ஒற்றை இதழ்
கொண்ட ஒரு பூ....!

மனத்தின் சாளரம்....!

கண்ணீரின்
கர்ப்பப்பை.....!

கருணையின்
சிம்மாசனம்.....!

ஒற்றைத் திராட்சை
மிதக்கும்
கண்ணீர் கிண்ணம்....!

ஒளியின் விலாசம்......!

கிடைமட்டமாக
எரியும் தீபம்.....!

சிறகு முளைத்த
இருமீன்கள்.... !

கருப்பு முத்துவைக்
கொண்டிருக்கும் சிப்பி....


*கவிதை ரசிகன்*

👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

எழுதியவர் : கவிதை ரசிகன் (16-Nov-24, 9:56 pm)
பார்வை : 49

மேலே